பக்கம் எண் :

136

  சகல லோகமுநி றைந்தசரு வேசர் சநிதிக்
ககல வோடவெனி லெங்ஙனம டுக்கு மலதோர்
புகலு மில்லையுயிர் பொன்றலுமின் றென்று பொரும
இனலி யேகியக னாநனவெ திர்ந்த தெனையே.
194
   
  கனவு றழ்ந்தபய பீதியுறு காட்சி கணமும்
நினைவில் வந்துமுனி கழ்ந்திடுதல் போல நிலவும்
மனது புண்படவி னைந்துயிர்வ ருந்தி வசமில்
தனுவு மிவ்வணந டுங்குமிது காண்டி தகவோய்.
195
   
  என்றி வாறுகன வன்சொலியி றுத்த லுமெதிர்
நின்ற வேதியனு மென்னைகொல்ப யப்ப டுதனீ
மன்றல் நாயகன்ம காகருணை வாரி தியையேன்
சென்று கூடலையி தென்னுன்மதி செப்பு தியெனா.
196
   
  ஐய கேளளிய னெத்தனமி லாவ மைதியில்
வைய கத்திறுதி நாள்குறுகி வந்து பிடியாக்
கைய ரோடெனைவி டுத்ததென கால ருகிலே
வெய்ய பாதலம்வி ழிப்படவெ டித்த துபுவி.
197
   
  நீனி றக்கருமு கிற்கிடைய மர்ந்த நிருபர்
ஆன னக்கதிர லர்ந்தவிரு நேத்தி ரமுமென்
ஊன கத்துருவ நோக்கியவு ருத்த மகவெங்
கான கத்துவய மாவினிரு கட்பொ றிகள்போல்.
198
   
  ஆத லாலினிய சாத்தியமி ரக்ஷை யளியேற்
கோத லாவதுள தொன்றுமிலை யென்று முலவாப்
பாத லாக்கினியெ னக்குரிய பங்கு பரிவென்
ஈதெ லாமயதி யீட்டுபய னென்று ரைசெய்தான்.
199
   
                      வேறு
   
  கடின சித்தன்க னாத்திறம்
முடியக் கேட்டனை முன்னவற்
கடிய நின்மனத் தாயதென்
நொடிதி யென்றன னூல்வலான்.
200
   
  மற்றி வன்புகல் வாய்மையால்
உற்ற தென்னுளத் தோர்பயம்
அற்ற தாயினு மாரிய
முற்று நம்பினன் முதல்வனை.
201