|
தீக்க
வல்லவெந் தீவினை
போக்க வல்லதும் புண்ணியம்
ஆக்க வல்லது மறுதிநாட்
காக்க வல்லதுங் கருணையே.
|
202 |
|
|
|
|
என்னு
ளத்தியல் பீதெனாப்
பன்னி
னான்பர மார்த்திகன்
அன்ன
தோர்ந்தரு ளாளனும்
பின்னர்
மற்றிது பேசுவான்.
|
203 |
|
|
|
|
கடையு
கத்தெழு காட்சிகண்
டுடையு நெஞ்சனு
றுந்துயர்
அடைய
நன்கறிந் தாய்வழிக்
கிடைம
றந்திட லெம்நீ.
|
204 |
|
|
|
|
காட்சி
தொக்கவிக் கடிமனை
மாட்சி
கண்டும னத்துள்வைத்
தாட்சி
செய்பவ ரருள்வழி
நீட்சி
யென்றுநி னைத்திடார். |
205 |
|
|
|
|
அனைய
தாதலி னன்பவிம்
மனையின்
மாட்சிம தித்துநன்
னினைவி
னேருநெ றிச்செலீஇ
முனைவ
னாடடை மொய்ம்பினோய்.
|
206 |
|
|
|
|
பத்த
பாலன ராம்பரி
சுத்த ஆவியின்
றுணையுனக்
கெத்தி
றத்தினு மியையுமாற்
சித்த
சஞ்சலந் தீர்திநீ.
|
207 |
|
|
|
|
ஈச
நேசமி யைந்தமெய்த்
தேசி
கன்னிவை செப்பியே
ஆசி
கூறிய னுப்பினான்
மாசி லானும்வ
ழுத்துவான்.
|
208 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
அகத்திரு
ளிரிந்தோட வருண்மொழச் சுடரேற்றி
மகத்துவ நெறிகாட்டும் வலவவிம் மனைமுனறில்
இகத்தையு மினிதாகப் பரத்தையு மெதிர்காட்டி
மிகத்தெருட் டினையைய விள்ளுவ தறியேனே.
|
209 |