பக்கம் எண் :

138

  பேருத வியையுள்ளும் பெற்றிமை யலதியானோர்
நேருத விடுகைம்மா றுளதுகொன் னினக்கென்னா
ஆருயி ரனையானுக் கன்பினஞ் சலிசெய்து
சீருயர் கதிசேருஞ் செந்நெறிக் கொடுபோனான்.

210
   
               வியாக்கியானி யரமனைப் படலம் முற்றிற்று.
                             ___________
   
 
சுமைநீங்கு படலம்
 
   
  விதிவிலக் கிகந்தீட்டு வினைச்சுமை சுமந்தொல்கி
முதுகுளுக் குறுமேனு மிடுகிய முடுக்கேனுஞ்
சதியெது மணுகாமே சமைத்துள வீடேற்ற
மதிலிரு மருங்காக வழியினி யனபோனான்.
1
   
  காவல னருள்சேய்செங் கமலமெல் லடிதோய்ந்த
தாவரு நெறியூடு தனிவரு மறைவாணன்
பாவரு திருநாமப் பதிகமிங் கிதமாக
மேவர வினிதோதி விரைகுவ லெனவுன்னா.
2
     
    தேவாரம், திருநாமப்பதிகம். (பண், காந்தாரம்.)
   
1. மன்னுயிர்த் தொகுதியீ டேற வானினும்
இந்நிலத் தினும்பிறி திலையென் றேமறை
பன்னியேத் தெடுப்பது பாவ ஜீவருக்
கின்னமு தாயதி யேசு நாமமே.
 
2. தெருளெலாந் தனதெனுந் தெய்வ மாமறைப்
பொருளெலாந் தனதெனப் பொலிந்தி லங்குவ
தருளெலா மன்பெலா மறனெ லாம்வளர்த்
திருளெலாந் தொலைப்பதி யேசு நாமமே.
 
3. பன்னருங் குணத்ததும் பவித்தி ரத்ததுந்
துன்னரும் பொருளதுந் தூய்மை பூண்டுளோர்
நன்னர்நெஞ் சத்திடை நடித்து நிற்பதும்
என்னுயிர்த் துணையதும் யேசு நாமமே.
 
4. நித்திய ஜீவனு நெறியும் போதமுஞ்
சத்திய நிலையமுந் தானென் றுள்ளது
பத்தியிற் பரவுவோர் பரம வீடுற
இத்தலத் திறுத்ததி யேசு நாமமே.