(பொ
- ரை) தனது கையிலிருக்கின்ற புஸ்தகத்தைக் கருத்தோடு
விரித்துப்பார்த்துச் சரீரம் மிகவும் நடுங்கி, விம்மி, வேதனை பொறுக்க
முடியாமல் 'ஐயையோ, ஐயையோ' என்று அலறி, பெருமூச்சிவிட்டு, நான்
செய்யவேண்டிய கருமம் என்னவென்று திகைத்து, நின்று, தளர்ச்சியடையுந்
தன்மையன்.
|
இருதலைக்
கொள்ளி யுற்ற வெறும்பென வேகு மார்க்கம்
ஒருதலை யானுங் காணா துணங்கியோ னுலவை யுற்ற
சருகெனச் சுழல்வன் யாண்டுந் தரிக்கிலன் மேலுங் கீழுங்
கருதிநோக் கிடுவ னுள்ளங் கசந்தழு திடுவன் மன்னோ. 5 |
(பொ
- ரை) இருதலைக் கொள்ளியிடைப்பட்ட எறும்பைப்போல
தான் செல்லவேண்டிய மார்க்கம் இன்னதென்று நிச்சயமாய்க்
காணமாட்டாமல் வாட்டங்கொண்டவனாகிய இவன் காற்றினிடைப்பட்ட
சருகைப்போலச் சுழல்வான். ஓரிடத்திலுந் தரித்திருக்கமாட்டான். மேலுங்
கீழும் கருத்தோடு நோக்கிப்பார்ப்பான். உள்ளங் கசந்தழுதிடுவான்.
|
ஈங்கிவ
னிவ்வா றாக விருந்துயர்க் கிறுதி காணான்
ஆங்கொரு நெறியைக் கூடி யடவிநீத் தகத்தை யண்மித்
தாங்கரி தாகி நின்ற தற்பரி பவங்க ளெல்லாம்
பூங்குழன் மனைம கார்க்குப் புகன்றிடா துளத்துக் காத்தான். 6
|
(பொ
- ரை) இவ்விடத்து இவன் இவ்வாறாகத் தனது பெரிய
துயரத்துக்கு யாதொரு முடிவுங்காணாதவனாகி ஆங்கு ஏதோ ஓர்
வழியைக் கூடி, காட்டினின்று நீங்கி வீட்டையடுத்துத் தன்னாற்
தாங்கமுடியாமல் நின்ற தனது வியாகுலமனைத்தையும் அழகிய
கூந்தலையுடைய மனைவிக்கும் மக்களுக்கும் சொல்லாமல் தன்
உள்ளத்தில் அடக்கிக் காத்தான்.
|
அயலுறு
நிழலைப் போக்க லாவதோ வகத்துள் ளோங்கி
உயவொரு புகலின் றென்னா வுறுத்திநின் றுடற்று கின்ற
துயர்பிற ரறியா வண்ணந் துடைத்திட முயன்றான் வாளா
வியனகத் தியன்மு கத்து விளங்குமென் றுணரான் போலும். 7
|
(பொ
- ரை) தன்னுடன் செல்லுகின்ற நிழலைப் போக்குதற்கு
யாரால் முடியும்? ஹிருதயத்துள் வளர்ந்து தப்பிப்பிழைக்க ஓர்
புகலிடமுமில்லையே என்று வருந்தச் செய்து நிலைபெற்றுப் போராடுகின்ற
தனது துயரத்தைப் பிறர் அறியாவண்ணம் துடைத்திட வீணே முயன்றான்.
பெருமை கொண்ட அகத்தின் தன்மை முகத்தில் விளங்குமென்பதை
இவன் உணரவில்லை போலும்.
|
விள்ளரும்
ஜீவ சாக்ஷி விளைத்திடுமுபாதிச் சும்மை
தள்ளரு நீர்மைத் தாகச் சமழ்த்தலாற் பரிந்தில் லாளை
எள்ளரு மகாரைக் கூவி யினிதரு கிருத்தி யென்றன்
உள்ளுயி ரனையீ ருற்ற தொன்றியா னுரைக்கக் கேண்மின். 8
|
|