பக்கம் எண் :

15

     (பொ - ரை) பேசுதற்கரிதாகிய ஜீவ சாக்ஷியானது
உண்டாக்குகின்ற உபத்திரவமாகிய சுமை, தாங்கமுடியாத தன்மையாகத்
தன்னை வருத்துகின்றபடியால் தன் மனைவியையும் அலட்சியஞ்
செய்யத்தகாத தன் மக்களையும் அன்பாகக் கூவியழைத்து இனிமையாகப்
பக்கத்திலிருக்கச் செய்து 'எனது உள்ளுயிருக் கொப்பானவர்களே,
என்னிடத்தில் நிகழ்ந்த விஷயம் ஒன்றிருக்கின்றது, நான்
சொல்லுகின்றேன் கேளுங்கள்.

 
   

' பரிபவ மொருங்கு கூடித் திரண்டவோர் பாரச் சும்மை
வெரி நுறீஇ யமிழ்த்தவாற்றேன் மிகமெலிந் தயர்ந்தேன்
மேலும் எரிதரு தேவ கோப விருங்கனன் மாரி பெய்து
விரிதிரை யுலகும் யாமும் வெந்தழிந் தொழிவே மன்றோ. 9

     (பொ - ரை) வியாகுலங்களெல்லாம் ஒன்றாகக் கூடித்திரண்ட ஒரு
பாரமான சுமையானது என் முதுகின்மேல் பொருந்தி அமிழ்த்த நான்
பொறுக்க ஆற்றேன். மிகவும் மெலிந்து அயர்ந்துபோனேன். மேலும்,
ஜுவாலித்து எரிகிற தேவகோபமாகிய பெரிய அக்கினி மழையானது
பெய்து அகன்ற சமுத்திரத்தினாற் சூழப்பட்ட இவ்வுலகமும் அதிலுள்ள
நாமும் வெந்து அழிந்து ஒழிந்துவிடுவோம் அன்றோ.

 
   

இத்திற நிகழு மென்றற் கெட்டுணை யைய மில்லை
எத்திறந் தப்பி யுய்து மென்பது மறியே மின்னே
நித்திய ஜீவ மார்க்க நெறியறிந் தோடே மாயிற்
சத்திய நரகத் தீயிற் சாவது சரத மாதோ. 10

     (பொ - ரை) இவ்விதம் நடக்குமென்பதற்கு எள்ளளவு
சந்தேகமுமில்லை. எவ்விதம் இதற்குத் தப்பிப் பிழைப்போம் என்பதை
அறிய மாட்டோம். இப்பொழுதே நித்திய ஜீவமார்க்க நெறியை அறிந்து
தப்பி ஓடேமாகில் உண்மையாகவே நரகாக்கினியில் நாம் விழுந்து சாவது
நிச்சயம்.

 
   

ஈசனார் கோபத் தாலே யெரிந்துநீ றாகு மிந்த
நாசதே சத்தை விட்டு நடப்பதே கரும மன்றேல்
மோசம்வந் தடையும் பின்னர் முயல்வது விருதா வென்று
பேசினான் பலகாற் றன்னைப் பிணித்தபே ரன்பி னாலே. 11

     (பொ - ரை) ஈசனுடைய கோபாக்கினியினாலே தகிக்கப்பட்டுச்
சாம்பலாய்ப் போய்விடும் தன்மையையுடைய இந்த நாசதேசத்தைவிட்டு
நடப்பதே கருமம். அப்படியில்லாவிட்டால் மோசம் வந்து நேரிடும்.
பின்னால் முயற்சி செய்வது வீண் என்று தன்னைக் கட்டியிருக்கின்ற
பெரிய அன்பினாலே பலதரம் பேசினான்.

 
   

இன்னண நிகழும் வேலை யினத்தவர் பலருங் கூடி
என்னவோ பித்த மேலிட் டிவையெலாம் பிதற்று கின்றாய்
உன்னது தலைசாய்த் தின்னே யுறங்குதி புலரி தோன்று
முன்னரே சுகமுண் டாகு மென்றின மொழிந்து போனார். 12