|
எப்பொருட்கு
மிறைநீம கேசனுநீ யென்றிருக்கச்
செப்பரிய பெருந்துன்ப முனைச்சேருந் திறனென்னே
ஒப்பரிய திரியேகத் தொருவாவுன் னுள்ளன்பின்
வெப்பமிகு மனலன்றோ விவ்வாறு விளைத்ததுவே.
|
12
|
|
|
|
|
நீதியான்
மனுநாச நேருமெனப் பிணைநின்று
சாதியா லெந்தாயுன் றண்ணளியின் றகையேனும்
ஆதியா னபடும்பா டத்தனையு மறிந்துள்ளம்
பேதியா துனையிங்ஙன் விடுத்ததுவே பெரிதம்மா.
|
13 |
|
|
|
|
வாழ்வாராம்
நரப்புலையர் வந்துநடு நின்றொருவர்
தாழ்வாரா மவர்பொருட்டுத் தாதைமுறை தப்பாமற்
போழ்வாராம் பட்டையத்தாற் பொன்றியொரு பரமசுதன்
வீழ்வாரா மீதென்னை வேந்தன்செங் கோன்முறைமை.
|
14 |
|
|
|
|
வானாடு
தொழுதிறைஞ்சு மகிமையெலாம் புறநிறுவிக்
கானாடு மலர்க்குழலோர் கன்னிகருப் பாசயத்துற்
றூனாடு முடலெடுத்திங் குயிர்ப்பலிநேர்ந் துதவினைநீ
ஆநாடற் கெளிதோநின் னன்புநிலை யச்சோவே.
|
15 |
|
|
|
|
மூன்றாய
கவடுடைய முதுமூலத் தனிப்பொருளே
தேன்றோயு மலர்ப்பொழில்வாய்த் திருவுள்ளந் துயர்மேவி
ஊன்றோயுந் திருமேனி யுதிரவெய ருகுத்ததும்போய்
ஆன்றோயித் தனைதுயரும் வேண்டுமோ வச்சோவே.
|
16 |
|
|
|
|
பாவிகளிற்
பிரதான பாவிகொடும் பாவிமுழுப்
பாவிதுணி கரப்பாவி பகுத்தறிவி னின்மூடப்
பாவிவிசு வாசமிலாப் பாவியதி சண்டாளப்
பாவியான் வந்தடைந்தேன் குமரேச பரிந்தருளே.
|
17 |
|
|
|
|
உசுவாச
மினியிலையென் றுயிரொடுங்கி யுடற்றுருத்தி
நிசுவாச மகல்காறு நின்னன்பை நெகிழவிடா
விசுவாச மெனக்கருளி வியனுலக மயலளைந்த
பசுவாச னையையகற்றிப் பதியுலகம் பரிந்தருளே.
|
18 |
|
|
|
|
கைம்மாறு
முளகொல்லோ கணிப்பறுநின் பேருதவிக்
கெம்மாவி யுடல்பொருண்மற் றிவையொருமூன் றையுமின்னே
தம்மானின் னருளுக்கே தக்கணையாச் சமர்ப்பித்தேன்
வெம்மாய வினைதொலைத்துன் வீட்டுலகங் கூட்டுகவே.
|
19
|