|
ஆவலொடு
மருள்வேத வறநெறியைக் கடைப்பிடித்து
ஜீவலயம் வருமெனினுந் திருவடிப்பற் றொழியாமே
பூவலயத் திடையுனக்காய்ப் பொன்றுமொரு சான்றாகக்
காவலநீ யடியேனைக் கடைக்கணிக்கக் கடவாயோ.
|
20 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
இன்னன
துதிபகர்ந் திறைஞ்சு மெல்வையிற்
பொன்னிலத் தவரொரு புனிதர்
மூவர்போந்
தன்னவன்
விழிப்படீஇ யஞ்சல் நின்வயின்
மன்னுக நஞ்சமா தானமாண் பென்றார்.
|
21 |
|
|
|
|
மூவரி
லொருவரா முதல்வன் முந்தியுன்
ஜீவனுக்
கழிவுசெய் தீய வெவ்வினை
யாவையுந்
தொலைத்தன மிடர்ப்ப டேலெனாத்
தாவருங்
கருணையிற் சாற்றி னாரரோ.
|
22 |
|
|
|
|
உந்துபே
ரன்பினா லுருகி யாங்கவன்
கந்தையைக்
களைந்தொரு கவின்கொளு வெள்ளுடை
விந்தையாய்ப்
புனைந்தனர் விசித்த வெங்கொடும்
பந்தமிற்
றுசநடு நின்ற பண்ணவன்.
|
23 |
|
|
|
|
மற்றொரு
தூயவர் மகிழ்ந்து வேதியன்
நெற்றியி
லொருகுறி நிலவக் கோட்டிவிண்
பற்றுசெந்
நெறிதிகழ் பயணப் பத்திரந்
தெற்றென
வருளிமற் றீது செப்புவார்.
|
24 |
|
|
|
|
செந்நெறி
யிதுவெனத் தெரிக்கு மாதலின்
உன்னெறிக்
குறுதுணை யாமி தோர்ந்துநீ
நன்னெறிப்
படின்வரு நவையின் றாம்விரைந்
திந்நெறி கடைப்பிடித் தேகற்
பாலையால்.
|
25 |
|
|
|
|
புண்ணிய
நகரைநீ பொருந்து போதவன்
நண்ணிய
வாயிலோர்க் கிதனை நல்கிடின்
உண்ணில
விடவுனை யுய்ப்ப ராமெனத்
திண்ணிதி
னுணர்த்திநீ சேறி யென்றனர்.
|
26 |
|
|
|
|
இவ்வகை
மூவரு மெதிர்ந்து தொண்டனுக்
குய்வகை
யுவந்தருள் புரிந்தவ் வொல்லையிற்
செவ்விதின் மறைந்தனர் சிந்தை
யுள்ளுளே
நைவரு மடியரை நாடு நம்பிரான்.
|
27 |