பக்கம் எண் :

143

  கரந்தமை வேதியன் கருதிக் கண்கணீர்
சொரிந்திரு கரந்தலை சூடித் தோத்திரித்
தரந்தைநீத் தகங்களித் தடிய னேனையும்
புரந்தமை யேயருட் புதுமை யென்றனன்.
     
28 
   
  வெரிநுறு சும்மையை விழுத்தி வெண்டுகில்
பரிவொடு நல்கியோர் பயணப் பத்திரந்
தெரிவுற வருளிய சீர்மை யாவையும்
பிரிவற வுள்ளினன் மறப்பில் பெற்றியான்.
29
   
  இத்தகு சிலுவையை யெய்து முன்னர்யான்
சித்தசஞ் சலச்சுமை சுமந்து தேம்பிய
அத்தனை துயரமு மகன்ற தேயஃ
தெத்தனை பெரியபாக் கியமென் றேத்தினான்.
30
   
  புல்லிய லுலகமீ யாத பொற்புறு
நல்லியன் மெய்ச்சமா தான நண்ணுமா
றல்லியன் மனத்தெளி வருளிக் காத்தவவ்
வெல்லையில் கருணையை யிதயத் துள்ளினான்.
31
   
  காண்டகு மிரும்பினைக் கவரூங் காந்தமொத்
தாண்டகை திருவரு ளகத்தை யீர்த்திட
மாண்டகு சாதனம் வகுத்துக் காட்டிய
சேண்டரு நெறிக்கொடு திருமி னானரோ.
32
   
                  சுமைநீங்கு படலம் முற்றிற்று
   
 
துயிலுணர்த்து படலம்
 
   
  விள்ளருந் தீவினை விளைத்த வெந்துயர்
தள்ளுறப் படுதலிற் றளர்ச்சி யின்றியே
உள்ளுறு முவகைமுன் னுந்த வுந்தலாற்
கள்ளமி லுணர்ச்சியான் கடிது போயினான்.
1
   
  அருத்தியிற் பற்பல்யோ சனைய கன்றுபோய்க்
கருத்தில்புன் மாக்களாற் கடப்ப தற்கொணா
வருத்தமென் றொருதட மலையை வானுறத்
திருத்தகு வேதியன் றெரியக் கண்டனன்.
2