|
நின்றுசு
கிக்கு மாத்தும வாழ்வை நினைகில்லீர்
பொன்றுட லிங்கோர் புற்புத மென்னும் பொருளுன்னீர்
தின்றுகொ ழுத்துத் தீச்சிறை வேட்டுத் திரிகின்றீர்
நன்றிது வாமோ பேதைய ரோநீர் நமரங்கள்.
|
11 |
|
|
|
|
வெம்புமி
ருத்தா மாழிகி ளம்பி விடுமாயுள்
அம்பிய லைக்கச் செய்வன செய்யா தலைகூம்பின்
கொம்பிலு றங்குங் கொள்கைய ரானீர் குணநாடில்
நம்பனை நம்பிக் கும்பிடுங் கூவி நமரங்கள்.
|
12 |
|
|
|
|
தீமலி
கும்பி யூடுபு குத்தித் தெறுதீமை
ஆமவை யாவுஞ் சேரவெ றுத்திட் டருளாளன்
கோமக னேசு சாமிகி றிஸ்து குமரேசன்
நாமம்வ ழுத்தி நல்வழி கூடும் நமரங்கள்.
|
13 |
|
|
|
|
மேக்குயர்
வாழ்வு மீடணை யாவும் விடுபட்டிங்
காக்கைத ளர்ந்தே சாக்கிடை யாகி யலமந்து
மீக்கிளர் மூச்சும் விக்குளு மேவி விழிகுன்றி
நாக்குழ றாமுன் னம்பனை வாழ்த்தும் நமரங்கள்.
|
14 |
|
|
|
|
கலங்கலிர்
வஞ்சப் பேயிடு வித்த கடுமாய
விலங்கைய றுக்கத் தக்கதி தென்கை மிளிர்கட்கம்
இலங்கருள் வேந்த னாணைத லைக்கொண் டெழுந்துள்ளம்
மலங்கலி ராகிச் சேசுவை நம்பி வழிக்கொண்மின்.
|
15
|
|
|
|
|
காலம்வி
ரைந்து தூமநி கர்ப்பக் கடி தோடுஞ்
சீலம றிந்து சிந்தைதி ரும்பித் திருவுள்ளஞ்
சாலம தித்து மெய்வழி கூடிற் றகைசான்ற
மேலுல கத்தைச் சேருவி ரென்றும் விளிவின்றால்.
|
16 |
|
|
|
|
உலகைம
யக்கிக் கலகம்வி ளைத்திட் டுயிர்மாய்க்கும்
அலகை கருச்சித் தடருநெ ருக்குற் றரியேறு
சுலவுல தைப்போன் றிதையுணர் வற்றுத் துயில்கின்றீர்
விலகியு யற்குத் தருணம்வி ழித்து விரைமின்னோ.
|
17 |
|
|
|
|
இத்தனை
யான வித்தக போத மெடுத்தோதிப்
பத்தன்வி ளிக்க நித்திரை பங்கப் படுமாறு
கத்துவ தென்னீ சொற்றவை முற்றுங் கனவென்னாப்
பித்துறு பேதை விண்டுது யின்றான் பிணமாக.
|
18 |