பக்கம் எண் :

146

  எஞ்சா தெம்பி யேனிரை கின்றா யிருகண்போற்
றுஞ்சா வாய்மற் றியாண்டுப டைத்தாய் துயருண்டென்
றஞ்சேல் சென்னீ தூங்குவல் சற்றிங் கயர்ந்தென்னா
விஞ்சா நின்ற தூக்கம்வி ளைத்தான் மிகுசோம்பன்.

19
   
  ஏங்கியி ரங்கிக் கூவிளி கொண்டிங் கெமையுய்யத்
தாங்குதி போலா மெப்பொரு ளுந்தந் தானத்தில்
ஊங்குத ரிக்க வுற்றறி யுங்கண் டுணர்கென்னாப்
பாங்குணர் வில்லாத் துணிகர னுங்கண் படைகொண்டான்.
20
   
  மற்றிவர் சொன்ன வாசக முந்தீ வருமென்று
சொற்றவை கொள்ளாத் துணிகர முங்கண் டுயில்கொள்ளும்
பெற்றிமை யுங்கண் டுன்னத வின்பம் பெறநாடும்
நற்றவ னெஞ்சிற் றன்வழி கூடி நவில்வானால்.
21
   
  என்னே யென்னே கைவரு மோச மெதிர்காட்டி
முன்னே யாகச் செந்நெறி கூடி முடுகும்மின்
இன்னே யென்னப் பன்னிய செஞ்சொ லியல்பெல்லாங்
கொன்னே போக்கி நித்திரை கொள்ளுங் குணமம்மா.
22
   
  தேகமெ டுத்தென் னாயுள்ப டைத்தென் றிகழ்செல்வ
போகம டுத்தென் பல்கலை கற்றுப் புகழ்பெற்றேன்
மாகத லத்து ஜீவசு கத்தை மதியாமே
ஊகம்வி டுத்துச் சாகும னித்த ருலகூடே.
23
   
  காவல னாணை பேணலர் ஜீவ கதிமார்க்கம்
மேவலர் சொற்ற மெய்யுரை கொள்ளார் விழிதுஞ்சிச்
சாவைவி ளிப்பா ரிவரையு ணர்த்துந் தகவோரில்
கூவலி றைத்து வீண்விழ லுய்க்குங் கொள்கைத்தால்.
24
   
  வகுத்தவ குத்துச் சொல்லிய வாய்மை மதிகேடர்
பகுத்துணர் வில்லா ராதலி னன்றோ பழுதென்னா
உகுத்தன ரெல்லாங் கவிழ்த்தகு டத்தின் னுழுந்தேபோல்
அகத்துற லின்றிப் போயதி வர்க்குய் வரிதம்மா.
25
   
  இன்னநி னைத்தே பச்சைம ரத்தே றிடுமாணி
என்னும்வ கைத்தாய்த் தெய்விக போத மிகலின்றித்
தன்னுள ழுந்தத் தண்ணரு டந்து தனியாவி
மன்னுந லத்தை யுன்னிவ ழுத்தி வழிபோனான்.
26
   
            துயிலுணர்த்து படலம் முற்றிற்று