பக்கம் எண் :

147

 
அமார்க்கப் படலம்
 

     
  ஆயிடை யொருபா னின்று மடுத்தவோர் வழிவந் தண்மி
ஏயபே ரழகு வாய்ந்த வீடேற்ற மதிலைத் தாண்டி
மாயசா லகனும் பூண்ட மாயவே டனுமென் றோது
தீயரோ ரிருவர் ஜீவ பாதையிற் றிருமி நின்றார்.
1
   
  அங்கவவர் தம்மைக் காணா வாத்தும விசாரி நீவிர்
எங்குறை கின்றீர் நும்பேர் யாவெது குறித்துச் செல்வீர்
பங்கமி லிடுக்க வாயில் வழிவராப் பான்மை யென்னீர்
அங்கண்வா னகத்து வேந்த னாணையை யறியீர் போலும்.
2
   
  சேயுயர் கதியைக் கூட்டுஞ் செந்நெறி முகப்பு வாய்ந்த
வாயிலை விடுத்து வேறோர் வழிநுழை பவரெல் லாரும்
மாயமார் திருட ரென்று மறைமொழி வகுத்துக் கூற
நீயிரந் நியம மீறிப் புகுவது நீர்மைத் தன்றால்.
3
   
  என்னவாண் டுரைத்த லோடு மிருண்டவன் மனத்தர் யாங்கள்
மின்னென மிளிர்ந்து குன்றும் வீண்மகி மையிலே தோன்றி
மென்னடை பயின்று மேலாம் விழுத்தவ வேடம் பூண்டேம்
தொன்னெறி விடாது பற்றிச் சுருதிமார்க் கத்து வந்தேம்.
4
   
  எட்டிரண் டறியார் போலு மெண்ணமொன் றின்றி வாயில்
விட்டிடை வழியிற் சேர்வோர் விட்புலத் தமரர் கோமான்
கட்டளை யிகந்து நின்ற கள்ளமார்க் கத்த ராய
துட்டரென் றிகழ்ந்து பேசத் துணிந்தனை தரும மன்றால்.
5
   
  சருக்கரை தின்று பித்தஞ் சாந்தமா மென்னிற் கைத்த
கருக்கிளர் வேம்பு தின்று கழித்திடக் கருது வோர்யார்
சுருக்கமிக் குறுக்கு மார்க்க மென்பது துணிந்து வந்தேம்
நெருக்குறும் வாயில் சுற்றிச் சுழல்வதே நீர்மைத் தன்றால்.
6
   
  உற்பவ பேத மான வுபநதி பலவோ ராற்றிற்
பொற்புறப் பொருந்தி யேகிப் புணரியிற் கலக்கு மாபோல்
அற்பத்திற் பேத மான வருநெறி யநேகம் வேத
விற்பத்தி நெறியைக் கூடி வீட்டுல கடையு மன்றே.
7