|
மார்க்கமிங்
கெதுவா னாலு மனமொழி மெய்க ளாலே
பார்க்கொரு முதலாய் நின்ற பரமநா யகனைப் போற்றிப்
போர்க்குமெய்ஞ் ஞான வேட புராதன முறைசா திக்கும்
தீர்க்கரே யன்றோ மேலாஞ் சிற்சுக போகந் துய்ப்பார்.
|
8
|
|
|
|
|
மரம்பயில்
குரங்கு போல மார்க்கங்க டோறும் வாவித்
திரம்பயி லாத சிந்தை திரியவிட் டிடாது செவ்வே
உரம்பயி லுடுமு போலு மொருதலை யாக முன்னோர்
பரம்பரை நெறியைப் பற்றிற் பயன்படு மிம்மை மாதோ.
|
9 |
|
|
|
|
கண்ணையே
கண்ணாக் கொண்டு காக்கின்ற விமையைப்
போலப்
புண்ணிய மூர்த்தி யெல்லாப் புவனமும் புரக்கு மாட்சி
எண்ணலை போலு மெம்மூ ரொழுக்கினுக் கிசைய நின்ற
பண்ணவ ராய வெம்மை யொறுப்பரோ பரிவி லார்போல்.
|
10 |
|
|
|
|
வெவ்விட
ருழத்த லின்றி வேறதர் பிடித்துன் னோடும்
ஒவ்வவந் துற்றே மென்னா வுள்ளுளே புழுங்கு கின்றாய்
அவ்விய மிரும்பைத் தேய்க்கு மரமென வரிதிற் பெற்ற
செவ்விய வாக்க மெல்லாஞ் சிதைக்குமென் றறியாய் கொல்லோ.
|
11 |
|
|
|
|
இந்நின்ற
நிலையி லெம்மோ டிணையன்றி யேற்ற மில்லாய்
முன்னின்ற வழியு மெம்மின் முடுகுவா யல்லை யென்னாக்
கன்னின்ற நெஞ்ச வஞ்சக் கள்வர்தாம் புகலக் கேட்டு
வெந்நின்ற சுமடு நீத்த வேதியன் விளம்ப லுற்றான்.
|
12 |
|
|
|
|
கண்ணிலான்
கருத்தி லானோர் சித்திரங் கவினத் தீட்டும்
வண்ணமாம் புலவர் நீதி வாக்கிய மெடுத்துக் காட்டிப்
புண்ணிய பாவந் துய்க்கும் பலாபலம் புலப்ப டுத்தி
நுண்ணிய தரும நீவிர் நுவலுத லழகிற் றம்மா.
|
13 |
|
|
|
|
தலப்பெரு
மையுநீர் பூண்ட தவப்பெரு மையும்ஜந் மித்த
குலப்பெரு மையும்வீண் செல்வக் குப்பையான் மலிந்த கோலா
கலப்பெரு மையுமென் றின்ன கனாத்திறங் கருதிற் கங்குல்
உலப்புற வொழியு மாபோ லொருங்கவிந் தொழியு மன்றே.
|
14 |
|
|
|
|
அயிலெயிற்
றரவுள் ளீட்டு மழல்விட மனைய நெஞ்சீர்
குயிலுமிம் மாய சால கோலத்தின் குணங்க ளெல்லாம்
வெயின்முன மஞ்சட் போல வெளிறுமாற் கால தண்டம்
பயிலுமப் பொழுதென் செய்வீ ரேழைகாள் பாவம் பாவம்.
|
15 |