பக்கம் எண் :

149

  கள்ளமி னெஞ்சு நெஞ்சிற் கலந்தமெய்ச் சொல்லுஞ்
                                     சொல்லொத்
தெள்ளரு மொழுக்குந் தத்த முளக்கரிக் கிசைந்து ளாரே
வள்ளலெம் மிளங்கோ மான்செம் மலரடிச் சுவடு தோய்ந்த
ஒள்ளிய நெறிசென் றந்தத் துயர்பர கதியிற் சேர்வார்.


16
   
  முறைத்திறம் பிறழா நித்த முத்திசா தனமா யுள்ள
அறத்திறம் பயின்று தூய ராதல்விட் டகத்தை மூடிப்
புறத்தவ வேடம் பூண்டு நடித்தலான் றோலைப் போர்த்து
மறத்திறம் பயிலும் வேங்கை வன்றொழின் மானு மன்றே.
17
   
  வேட்டுவன் புதன்ம றைந்து விடாதுபுட் சிமிழ்த்தல் போலக்
காட்டுமித் தவவே டத்திற் கரந்துல கின்பங் கௌவுங்
கேட்டுளீர் சுருதி யுண்மை கிளப்பினு முணரீர் நன்மை
வீட்டுதி ரென்று நீங்கா விழுமமே விழைந்து நின்றீர்.
18
   
  மருள்பரம் பரையி னோடு மறைநெறி மயங்கு மாயின்
இருணனி யியங்கும் வானத் திருங்கதி ரிரவி முன்னர்த்
தெருளிலா மனத்தீர் நுங்க டீச்செய லொருவீ ராகி
அருள்வழிப் பட்டே மென்ற லகந்தையின் மடமை யாமால்.
19
   
  இந்நிலம் புரந்து நிற்கு மிரக்ஷண்ய கிரியிற் றோன்றி
மன்னுபன் னதியு மொன்றாய் மருவியோர் முகமா யோடி
உன்னரும் பரமா னந்த வுததிபுக் கொடுங்கு நீர்சொல்
அன்னிய கான்யா றெல்லா மளறுபுக் கழுந்து மன்றே.
20
   
  எதிரெதி ராகச் செல்லு மிடைநெடுந் தூர முள்ள
நதிநத மொருங்கு கூடா கூடினு நாமம் வேறாம்
கதியுறு மார்க்கத் தோடு கதழெரிக் கவிழ்த்து மார்க்கம்
எதிருறீஇப் பொருந்து மென்ற லேழமைப் பால தேயாம்.
21
   
  வேதமார்க் கத்தின் மேய வேதிய ரொழுக்கம் வேதம்
ஓதற நெறியைப் பற்றி யுற்பவ தோடத் தாலே
சாதக மான பாவஞ் சருவிடா தகற்றி யொல்லுந்
தீதினற் கருமம் யாவுஞ் சிந்தையாற் செய்தல் வேண்டும்.
22
   
  அகிலகா ரணராந் தூய வாண்டகைக் கடங்கா தீட்டு
சகலபொல் லாங்கு முள்ளிச் சஞ்சலித் தழுது ணைந்து
புகலிட மான யேசு புண்ணிய பலத்தை நாடி
இகலிமுப் பகையை வென்றிங் கிடைநிலா தோடல் வேண்டும்.
23