|
ஒளிக்குறி
வாயி லூடு புகுந்தொரு வழிப்பட் டுள்ளந்
தெளிக்குநல் லுரைகேட் டான்ம தீக்கைபெற் றளவி லின்பம்
அளிக்குநற் கருணை யாய வாரமிர் துண்டு வேந்தன்
விளிக்குநா ளளவுந் தூயவிதிவிலக் கோம்பல் வேண்டும்.
|
24
|
|
|
|
|
ஜீவன்முத்
தருக்கு நல்குந் திவ்விய சிந்தை ஞானம்
மேவருங் குணங்க டீர்க்க விசுவாசம் விரதஞ் சீலந்
தாவரு நலங்க ளெல்லாந் தந்தருள் புரிந்து காக்குந்
தேவநல் லாவி யுள்ளந் திகழ்தர ஜெபித்தல் வேண்டும்.
|
25 |
|
|
|
|
இவ்வகை
ஜீவ மார்க்கத் தியல்வதே ஜீவன் முக்தர்
செவ்வியென் றறிமி னீண்டு செப்பிய விவற்றொன் றேனும்
ஒவ்வலின் றும்பா லிந்த வுண்மைவற் புறுத்து மென்னை
அவ்விய னென்று தூறு மவமதி யழகிற் றம்மா.
|
26 |
|
|
|
|
கண்டிலி
ரோவென் னெற்றி கவினுமோர் ராஜ சின்னம்
பண்டைய கந்தை நீக்கிப் பரிவினல் கியவி்த் தூய
வெண்டுகில் கையி லீதோ விளங்குசா ஸனமிவ் வெல்லாம்
அண்டர்நா யகனே பாலித் தருளிய வருட்பே றாமால்.
|
27 |
|
|
|
|
மிருத்தெனு
நதியைத் தாண்டி வியன்றிரு நகர வாயில்
அருத்தியிற் கண்டு சேரு மளவையிவ் வடையா ளத்தால்
திருத்தகு பரம ராஜன் றிருவடித் தொழும்ப னென்னாக்
கருத்துற வறிந்துள் ளுய்ப்பர் கணிப்பருங் கடைகாப் பாளர்.
|
28 |
|
|
|
|
இத்திற
வடையா ளங்க ளெவர்க்கிலை யவர்தா மீசன்
முத்திமா நகர வாயின் முகப்புற வடுத்த போதும்
வித்தக விமலன் சொற்ற விதிவிலக் கோம்பு கில்லாப்
பித்தரென் றெரிபா தால பிலத்திடைப் புகுத்து வால்.
|
29 |
|
|
|
|
ஆரணஞ்
சொன்ன வாறிங் கடுத்தன னனிய னேன்யான்
சோரமார்க் கத்து வந்து சுவரேறிக் குதித்தீர் நீவிர்
காரணங் கருதி யென்னைக் கடைக்கணித் தருள்வர் நும்மைக்
கோரவெஞ் சிறையி லுய்ப்பர் முடிவிலெங் கொற்ற வேந்தன்.
|
30
|
|
|
|
|
வேதிய
ரல்லீர் கள்ள வுள்ளத்தீர் விபுத ராயன்
ஆதரம் பெற்றீ ரென்றற் கடையாளம் யாது மில்லீர்
கோதொரீஇ நன்மை கூடுங் குணமுமின் றாத லாலே
வேதனை யுழக்க நின்றீர் வேறினிப் புகல்வ தென்னே.
|
31 |