|
பேசரும்
வருத்தந் துன்பம் பிறங்கினும் பிதாவின் சித்தம்
ஈசனார் செயலெல் லாமென் னீடேற்றத் திசையு மென்னா
நேசமோ டமைய வேண்டு நிலைபிச கிடுவ ராயின்
நாசமோ சம்பொல் லாங்கு நரகும்வாய் திறக்கு மன்றே.
|
40 |
|
|
|
|
இடையில்வந்
திடையிற் போன விருவர்தங் கதியீ தாக
உடையவன் றிருவாக் கொன்றே யுறுதுணை யாகக் கொண்டு
நடைவழி பிடித்துச் சென்ற நலங்கிளர் மறைவ லாளன்
மிடைதரு வருத்த மென்னும் வியன்கிரி யருகர் வந்தான்.
|
41 |
|
|
|
|
அமார்க்கப்
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
அங்க
ணோர்சிறை மீக்கிளர்ந் துயர்விசும் பணவி
மங்கு றோய்ந்தெழின் மறிதரத் தண்ணிழன் மருவிக்
கொங்கு யிர்த்துவான் மீனெனப் பன்மலர் குழுமும்
பொங்க ரொன்றுள தரதுலர் புகலிடம் போலும்.
|
1 |
|
|
|
|
வேங்கை
சந்தனங் காரகில் தேக்கொடு மிடைந்த
கோங்கு சண்பக மாப்பலா வத்திகுங் குலிகம்
ஓங்கு மேழிலைம் பாலைகுங் குமம்புல வோமை
பூங்கு ருந்தசோ கந்தம ரத்தைபூங் கடம்பு.
|
2 |
|
|
|
|
வன்னி
பாதிரி யிலவங்கம் வன்மரை வகுளம்
புன்னை வாதுமை யிருப்பைவான் றொடுமடற் பூகம்
தென்னை யாமல கங்கடுத் தான்றிதிந் திருணி
பொன்னி ணர்ப்படு கொன்றையச் சுவத்தமால் புன்கு.
|
3
|
|
|
|
|
புலந்தொ
குத்தபல் ஜாதிய விருக்கங்கள் பொதுளி
நலந்தொ குத்தபன் மலர்க்குவை நாற்றிசை கமழ
நிலந்தொ குத்தமன் பதைக்கெலா மகமகிழ் நிலவப்
பலந்தொ குத்துத விடுவதோர் பைம்பொழிற் பழுவம்.
|
4 |
|
|
|
|
பொங்கு
ஜீவபுஷ் கரிணியின் புதுப்புனல் தேக்கி
அங்கு ரித்தபுற் பூண்டுதண் டலைக்குல மனைத்துங்
கொங்கு லாய்வரும் வசந்தமென் கரல்படுங் கோட்பால்
பங்க மில்பசும் பொன்மய மாயதப் பழுவம்.
|
5 |