பக்கம் எண் :

153

  அண்ணல் வானகத் தரசனிவ் வகலிடம் புரக்குந்
தண்ண ளிக்குடை கவிந்தன வாமெனத் தயங்கிக்
கண்ண கன்றவெப் பாங்கருங் கவினுறக் கவிந்து
நண்ணு வார்க்குறு வெப்பநோய் தணிக்குமந் நறுங்கா.

6
   
  முந்து முத்தலைச் சிகரியின் முளைத்துமூ துலகின்
பந்த நூறிடு ஜீவமா நதிமுகம் படிந்து
விந்தை யாய்நர ஜீவர்க்கு விழுமநோய் துடைக்கும்
மந்த மாருத மலிந்ததம் மதுமலர்ச் சோலை.
7
   
  அலர்ந்த செவ்வியி லகத்தெழு மளியமென் குரலிற்
புலர்ந்த டைந்தவர் விடாய்தணித் துள்ளவெப் பொருளும்
உலர்ந்த வான்பயிர்க் குதவுமோர் மழையென வுதவி
மலர்ந்த செய்கையில் வள்ளலைப் பொருவுமாண் பொதும்பர்.
8
   
  மண்ட லத்துற முடங்குதா ளூன்றிவாய் மலர்ந்து
விண்டு தூமலர்க் கட்டுளி வடித்துமெய் யரும்பித்
தண்ட ளிர்க்கரம் விரித்துயர் சினைத்தனை தாழ்த்திக்
கொண்ட செவ்வியிற் பரவுதொண் டரைப்பொரூஉங்
                                  கொழுங்கா.
9
   
  புண்ணி யன்றிரு வடிமலர்க் கன்புசெய் புனிதர்
உண்ணி கழ்ந்தமெய்ப் பத்தியி னொள்ளிய செயல்போல்
வண்ண வான்றருக் குலமலர் நறுமண மலிந்து
கண்ண கன்புவி முழுவது நறுங்கடி கமழும்.
10
   
  பொன்னி லத்தர சன்றிரு வோலக்கப் பொதுவின்
மன்னு பல்லியங் கலித்தெனச் சினைதொறும் வதிந்த
பன்னி றத்தபுள் ளினஞ்சிலம் பியவொலி பம்பித்
துன்னு வோருளங் களிப்புறச் செவிக்கின்பந் தொகுக்கும்.
11
   
  வனம டங்கலும் போதகம் வரியளி மருவும்
வனம டங்கலும் போதகக் குருளையு மயக்குங்
கனம டங்கலும் போதக வுங்களி மயில்கள்
கனம டங்கலும் போதகந் தரும்பல காட்சி.
12
   
  அமரர் யாவருங் கைபுனைந் தியற்றிய வாதி
குமர நாயகன் றிருமணப் பந்தலோ குறிக்கிற்
றமர நீருல கத்துவாழ் சபையெம்பி ராட்டி
விமல லீலையுய் யானமோ யாதென விரிப்பாம்.
13