|
இனைய
கற்பகப் பொதும்பரின் நடுவண தியைந்த
நனைம லர்த்தட வாவியைச் சிந்தையுண் ணாடிற்
கனைக டற்புவி முழுவதுங் கதிக்கரை யேறும்
புனையும் வாசக மன்றிது புராதன சுருதி.
|
14 |
|
|
|
|
ஆழி
நாயகன் ஞானத்தி லருளிற்றூய் மையினில்
வாழி யன்பினி லாழ்ந்துநீர் நிறைந்துநிர்ம் மலமாய்ப்
பாழி யம்புவி யாத்துமப் பயிர்வளஞ் சுரப்ப
ஊழி யூழிபாய்ந் துறுவது ஜீவநீ ருதகம்.
|
15 |
|
|
|
|
ஜீவ
னுக்குல வாவொரு நித்திய ஜீவன்
நாவி னுக்கமு தச்சுவை நினைவிற்கு நறுந்தேன்
தீவி னைக்கொரு மருந்துவண் சிறையளி முரல்பைங்
காவி னுக்கணி யாயதிச் சீவநீர்க் கங்கை.
|
16 |
|
|
|
|
புனித
மாயது புண்ணியம் பொலிவது பாவத்
துனித விர்ப்பது சுகிர்தத்தை விளைப்பது துய்க்கும்
மனித ஜீவரை வானவ ராக்கிடும் வலத்த
தினிதி னெங்கணுஞ் சுரப்பது நாடுவோ ரெவர்க்கும்.
|
17 |
|
|
|
|
பாசம்
வீசிய பான்மைய பளிங்கெனத் தெளிந்த
தேசு லாமுழு மதிக்கதி ரொருவழித் திரண்டு
மாசி லாமடு வெனப்பெயர் வதிந்தன வனைய
ஆசில் வெண்மணற் குவால்பொரூஉ மலைபுரள் கரைய.
|
18 |
|
|
|
|
ஜீவ
மாநதி தீரத்தை யடுத்தலிற் செழிப்புற்
றோவி லாதது சுரப்பதத் தூயநீ ரூற்றாம்
ஆவி வேட்டுவந் தருந்துவோர்க் கான்மநோ யகலுந்
தாவி னித்திய சாம்பிராஜ் ஜியம்வந்து சாரும்.
|
19 |
|
|
|
|
வானி
ழிந்துவந் திம்பரை மருவிய மதுரம்
ஆன பானநீ ராகவிங் கமைந்ததெள் ளமுதம்
ஞான போனக நராத்தும ஜீவசஞ் சீவி
தீன ரக்ஷணை யருள்வதோர் செழுஞ்சுவைத் தீம்பால்.
|
20 |
|
|
|
|
நிரும
லாதிபன் றொன்றுதொட் டுலவவோர் நியமத்
தரும வேலியிட் டுவப்புடன் றரணியிற் சமைத்த
மரும லிந்தநந் தனவனம் வளம்பெற நாளுந்
திரும லிந்தவிச் சீவபுஷ் கரிணிநீர் தேக்கும்.
|
21 |