பக்கம் எண் :

155

  மழையி லாதிலை மாயிரு ஞாலத்தின் மரபு
விழையும் ஜீவவூற் றிலதெனி லிலையுள்வே ரூன்றித்
தழையு மன்புநற் றருமமுந் தானமுந் தவமும்
பிழையின் ஞானமு மெய்விசு வாசமும் பேசில்.

22
   
  மூன்றொ ருத்துவ தெய்விக மொருங்குடன்
முயன்றே ஆன்ற ரக்ஷணி யச்செயன் முடியுமிங் கதுபோல்
வான்ற ருக்குலம் வசந்தமென் கானறு வாவி
மூன்று நல்கும னோக்கிய முயன்றடுப் பவர்க்கே.
23
   
  தண்ணி ழற்புகப் புறஞ்சுடு தாபிதந் தணியும்
உண்ணி லாவுமென் கால்பட வேற்றுரு வுறழும்
புண்ணி யம்பொலி மானத வாவிநீர் புசிக்கில்
நிண்ண யம்பசி தாகசங் கடஞ்சதா நீங்கும்.
24
   
  காணி னுங்கலி தீருமிவ் வாவியைக் கருதிற்
சேணு லாவிய ஜீவனு முள்ளுளே சேரும்
மாண ரும்புகழ் வழுத்தினித் யானந்த மருவும்
ஊண தாக்குவோர்க் குறுபய னுரைக்குமா றரிதே.
25
   
  இன்ன தன்மைய வெழின்மலர்ச் சோலையை யெதிர்ந்தும்
மன்னு ஜீவபுஷ் கரிணியைக் கண்டுள மகிழ்ந்தும்
வன்ன மாங்குயி லின்னிசைக் குரல்செவி மடுத்தும்
நன்னர் வேதியன் றன்னுள நயந்திவை நவில்வான்.
26
   
  கருத்த னாதியி லாதமோ டேவையைக் கருதி
அருத்தி யிற்குடி யமைத்தவே தேனெனு மணிகொள்
மருத்த ழைந்தகா வனமிதை மானுமென் றுரைக்கிற்
பொருத்த மின்றது தீமையை விளைத்தவோர் புணர்ப்பால்.
27
   
  பொறிநு கர்ந்திடு புலனெலாம் புனிதமா தலினும்
செறியும் ஜீவபுஷ் கரிணியின் றிறத்தினுஞ் சிந்தை
மறியு மன்பின்மன் னுயிர்க்கெலா நண்புவாய்ந் ததினும்
நெறியு ளார்புகு முயர்பர தீசொன்றே நிகர்க்கும்.
28
   
  கரையில் பேரின்ப லோகயாத் திரிகர்க்குக் கருணை
அரையன் மெய்விடா யாற்றியென் றமைத்தவீ தாயிற்
புரையி லாதவப் புரவலன் பொங்குபே ரன்பை
உரையி டற்கெளி தோசுவர்க் கத்துர வோர்க்கும.
29