பக்கம் எண் :

156

  தனித மார்மது மலர்ப்பொழிற் சிறப்பெலாஞ் சமைந்த
புனித ஜீவபுஷ் கரிணியின் புண்ணியப் பொலிவென்
றினிதி னுள்ளிமற் றிவண்சிறி திருந்திளைப் பாறித்
துனித விர்ந்துசெல் வேனெனச் சோலையுட் புகுந்தான்.

30
   
  சீர்மை யுற்றசெங் கால்வெள்ளை யன்னங்கள் செவிய
நீர்மை யுற்றசெவ் வாய்மட மஞ்ஞைக ணிலவிக்
கூர்மை யுற்றதம் மினத்தொடும் வாவிவநீர் குடித்து
நேர்மை யுற்றமை கண்டுகண் டுவந்தனன் நிவிர்த்தன்.
31
   
  மேவி வந்துதீத் தொழுல்புரி வெய்யகோ ணாய்கள்
ஜீவ கங்கையைப் பருகலுஞ் செம்மறி யாடாய்த்
தாவில் சாந்தநண் பாதிய சற்குணந் தழுவிப்
போவ தாகிய புதுமைகண் டதிசயம் பூத்தான்.
32
   
  பாத வங்களிற் பழுத்ததீம் பழநறை பருகி
வேத சாகையி னிறாலிழி மிகமது ரிக்கும்
கோத கன்றவக் கொழுநறை குழீ இக்குழீஇ நுகர்ந்து
மாத வங்கள்செய் வார்நிலை கண்டுள மகிழ்ந்தான்.
33
   
  பக்க நின்றுபேய்க் காற்றக நுழைந்துபாழ் படுக்கா
தக்க ரப்படை பற்பல வங்கங்கு நிறுவித்
திக்கு பந்தனஞ் செய்தவத் திறத்தினைத் தெரிந்து
மிக்கு ரத்திறை யருட்பரா மரிப்பினை வியந்தான்.
34
   
  தூங்க வாவியின் றுறைதொறும் வலம்புரி சுப்ர
சங்க மாத்தொனி முழங்கலிற் செவித்தொளை தாக்கி
அங்கங் கேதுயி லுணர்ந்தெழுந் தவர்பல ரன்பு
பொங்கி மெய்த்திருப் பணிபுரி புதுமையுங் கண்டான்.
35
   
  கண்ணு முள்ளமுங் களிப்புறக் கடிகமழ் காவின்
எண்ண ரும்பல காட்சிகண் டிதயநெக் குருகிப்
புண்ணி யம்பொலி ஜீவபுஷ் கரிணியின் புனிதத்
தண்ண றும்புன லருந்துவான் வேட்டவண் சார்ந்தான்.
36
   
  ஆர ணத்துறை யணைந்துநின் றாழ்ந்தவம் மடுவின்
கார ணத்தையுங் காவலன் கருணையி னிறைந்த
பூர ணத்தையு நித்திய ஜீவனிற் பொருத்தி
மார ணத்தொட ரறுத்திடு மாண்பையு மதித்தே.
37