பக்கம் எண் :

157

  சங்கை யின்றியுட் டழைத்தபத் தியின்விசு வாசச்
செங்கை யாரவத் திவ்விய தீர்த்தத்தை முகந்து
பொங்கு மாவலிற் பருகின னன்புளம் பூப்பத்
திங்க ளிற்றிகழ்ந் ததுமுகஞ் செழித்தது ஜீவன்.

38
   
  மாகந் தீர்ந்திவண் மருவிய ஜீவநீர் மாந்தி
ஆகந் தோய்தலு மாத்தும விடாய்தணிந் தாறாத்
தாகந் தீர்ந்தது தீர்ந்தது பசிப்பிணி சமழ்த்த
சோகந் தீர்ந்தது தீர்ந்தது நரஜென்ம தோடம்.
39
   
  அருந்து நீரெனத் தெளிந்தது சித்தமங் கவற்குப்
பொருந்த கப்புறக் கருவிகள் புனிதமாய்ப் பொலிந்த
வருந்து சாவுமின் றாயது புத்துயிர் மருவித்
திருந்தி னான்மறை வாணன்மற் றியாதினித் தெரிப்பாம்.
40
   
  இனைய சீலனா யாங்கொரு தருநிழ லிருந்து
சினைய லர்ந்தபூ நறுவிரை யளைந்துலாந் தென்றல்
வினைய மோடுதன் மேனியிற் படியவிண் ணவர்கோன்
புனைம லர்க்கழ றொழுதுதோத் திரம்பல புரிந்தோ.
41
   
  இத்த னைக்குநா னருகனோ வென்னையீ டேற்றச்
சித்தம் வைத்தனர் தம்பிரான் சிந்தனை யினியென்
வித்த கத்திரு வாவிநீ ரருத்திய விதத்தில்
எத்த னைக்கதி கந்நலம் பெற்றன னென்னா.
42
   
  வள்ளல் நங்குரு ராயனைச் சிலுவைமண் மேட்டிற்
கள்ள மில்லகக் கண்கண்ட காட்சியைக் கருதி
அள்ளி யன்பலர் தொடுத்தினி தமைத்ததே வாரம்
பிள்ளை நீர்மையிற் புனைந்தனன் றிருவடி பிறங்க.
43
   

      தேவாரம்,விசுவாசக் காட்சி. (பண், காந்தாரம்)
   
1. கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை
வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சனநிதியை
உள்ளமுவப் புறுதேனை யுயிர்க்குயிரை யுலவாத
தொள்ளமுதைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே
.
 
2. படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர்திரு
மடிசாய்த்த திருமேனி வதைந்திழிசெங் குருதியுக
முடிசாய்த்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்
கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே.