3. |
பொய்த்திருக்கும்
வஞ்சனையும் பொல்லாங்கும் புறங்கூற்றும்
எத்திருக்கு முடையேமை யெண்ணியொரு பொருளாகப்
பத்திருக்கும் பிரமாணப் படியொழுகி வினைமுடித்த
சித்திருக்குஞ் செழுந்தவனைச் சிலுவைமிசைக் கண்டேனே.
|
|
|
4. |
மூவினைக்கு
மும்முதலாய் மும்முதலு மொருமுதலாந்
தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் றனித்தாயைத்
தீவினைக்கோ ரருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே.
|
|
|
5. |
மூவாத
முதலவனை முதுசுருதி மொழிப்பொருளை
ஓவாத பெருங்குணத்த வுத்தமனை யுலகனைத்துஞ்
சாவாத படிகாக்கத் தனுவெடுத்துத் துஜங்கட்டுந்
தேவாதி தேவனையான் சிலுவைமிசைக் கண்டேனே.
|
|
|
6. |
துன்னெறிபுக்
குழல்கின்ற தூர்த்தரிலுந் தூர்த்தனாய்ப்
பன்னெறிகொள் பரசமயப் படுகுழிவீழ்ந் தழிவேற்கு
நன்னெறியின் றுணிபுணர்த்தி நயந்திதயக் கண்டிறந்து
செந்நெறிகாட் டியகுருவைச் சிலுவைமிசைக் கண்டேனே.
|
|
|
7. |
அந்தரதுந்
துமிமுழங்க வமரரெலாந் தொழுதேத்தத்
தந்தைதிரு முனமகிமைத் தவிசிருந்த தற்பரனை
நந்தம்வினை தொலைத்திடற்காய் நானாகி நலிந்திரத்தம்
சிந்தியுயி ரவஸ்தையுறச் சிலுவைமிசைக் கண்டேனே.
|
|
|
8. |
நிந்தனைசெய்
திருப்பாணி நிரையழுத்திச் கொலைபுரியும்
வெந்தொழிலர் செய்வினையின் விளைவறியார்
பொறுத்தருளும்
எந்தையென வெழிற்கனிவா யிதழவிழெம் பெருமானைச்
செந்தனிக்கோற் கொளுந்தேவைச் சிலுவைமிசைக்
கண்டேனே.
|
|
|
9. |
மறம்வளர்க்குங்
களருளத்தை வளமலிதண் பணையாக்கி
அறம்வளர்க்கு மருண்முகிலி னன்புமழை மாரிபெய்து
புறம்வளர்க்கு மிரக்ஷிப்பின் புகழமைந்த புண்ணியத்தின்
திறம்வளர்க்குஞ் செழுங்கிரியைச் சிலுவைமிசைக்
கண்டேனே.
|
|
|
10. |
காயொளியிற்
கதிர்பரப்புங் களங்கறுநீ தியின்சுடரைப்
பாயொளிகொள் பசும்பொன்னைப் பணிக்கருஞ்சிந்
தாமணியைத்
தூயொளிகொ ணித்திலத்தைத் தூண்டாத சுடர்விளக்கைச்
சேயொளிகொள் செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே.
|
|
|
|
ஜீவபுஷ்கரிணிப்
படலம் முற்றிற்று. |