பக்கம் எண் :

159

 

உபாதிமலைப் படலம்
 

 
     
   

கஞ்சமலர்ப் பாதமிரு கண்கலுழி யாற்கழுவிச்
செஞ்சொன்மலர்ப் பாமாலைத் தேந்தொடைய லைச்சேர்த்தி
அஞ்சலித்துப் போற்றியருள் வேண்டிநின்றங் காவலுடன்
நெஞ்சாரப் புல்லிவழி கூடினா னேர்கருதி.      

1
     
 

காரார்பூங் காவகத்தின் கண்ணார்நி ழற்சுகமுஞ்
சீரார்ந றுஞ்சுனையின் றேம்படுதெண் ணீர்ப்பயனும்
ஏராருந் தூயவி ளங்காலின் றேற்றரவும்
நேராயு ளத்திற்பொ றித்துநெறி கூடினான்.      

2
     
 

செல்வான்வ ழிமறித்துச் சீறிவிட முள்ளெயிற்றுக்
கொல்வாள ரவங்கு றுக்கெதிர்ந்த் கொள்கைகோல்
தொல்வாரி திப்புவியி றொக்கபெருந் துன்பமெலாம்
மல்வாய்த்து நின்றம லையடிவா ரத்தணைந்தான்.  

3
     
 

அவ்வசலந் தன்னைய றியாதார் யாருமிலை
கௌவைநீர் வேலிபு டைவளைந்த காசினியில்
ஒவ்வொருவ ருள்ளத்து யர்வேயு யர்வன்றிச்
செவ்வேமட் டிட்டளவு செப்பரிது நேருங்கால்.   

4
     
 

தொன்மையல கிற்பாவந் தோன்றியநாட் டோன்றியெங்குந்
தின்மைபெரு கப்பெருக வோங்கிச்செ ருக்கடைந்து
வன்மைமிகு துன்பம்ம னக்கவலை துக்கமெனுந்
தன்மைத்த னிச்சிகர மூன்றுத டித்தனவால்.       

5
     
 

கல்லாயி ளக்கமின்றித் தீயவினைக் காடுசெறிந்
தெல்லோன்சு டர்விளக்க மின்றாகி யெப்புறமும்
அல்லாயி ருள்குழுமித் துர்க்குணமுட் பூண்டளவிப்
பொல்லாத வல்லிதயம் போன்றுளதப் பூதரமே.   

6
     
 

வட்டமிடுங் கிட்டிவரும் வந்துவந் தச்சுறுத்துங்
கட்டம்வி ளைக்குங்க டுகடுக்குங் கௌவியுயிர்
நட்டஞ்செ யும்பொல்லார் நல்லாரென் றோராத
துட்டவி லங்கனந்தந் தொக்கதந்த்ச் சூழலே.      

7