|
வானளவி
நிற்பதெனக் கண்டும யங்கிமதி
ஈனரிடர்ப் பட்டிரிவ ரெட்டுணையு மெண்ணாது
ஞானமுறு மாந்தர்ந கைத்தெள்ளி மேற்போவர்
கானமுறு மிவ்விலங்கற் காட்சியது பல்வகைத்தால்.
|
8 |
|
|
|
|
தீர்க்கவிசு
வாசிகளே யன்றிச்செ கத்துழல்பொய்
மார்க்கரெவ ரேனுமிந்த மாமலையைக் கிட்டிவரிற்
பார்க்கவே யுண்ணடுங்கி மெய்பதறிப் பாழ்ங்குழியிற்
சேர்க்குமமார்க் கம்புகுவ ரென்றுந்தி ரும்பாரால்.
|
9 |
|
|
|
|
அண்டபகி
ரண்டமெலாம் போய்ப்போய ரைநொடியிற்
கண்டுவரும் பொல்லாத கன்மனவன் பேய்க்குரங்கு
மண்டுபெருந் துன்பம லையிதன்பேர் கேட்டாலுந்
தெண்டனிட்டுக் குன்றித்தி யங்கியுயிர் தேயுமால்.
|
10
|
|
|
|
|
செந்தழல்போ
லக்கொளுத்துஞ் சிந்தனையை ஜீவியத்தை
எந்தவித மென்னினுங்கை யெட்டியைப்போ லாக்குவிக்கும்
வெந்தறுகட் பாம்பின்வி டம்போன்ம திகெடுக்கும்
இந்தவிடுக் கண்மலையின் சாரலெதிர் வோரெவர்க்கும்.
|
11
|
|
|
|
|
ஒற்றைச்சு
டர்த்திகிரி யோச்சியுல காண்டமுடிக்
கொற்றவருந் துன்பமலைக் கோடெதிர்கண் டேங்குவருட்
பற்றற்ற ஞானபரி பாகருந்தாம் பார்த்தவுடன்
சற்றுட்க லங்குவரீ தென்னேத ருக்கம்மா.
|
12 |
|
|
|
|
செப்பிலுல
கத்துநர ஜென்மமெடுத் தோரெவரும்
இப்பெரிய சாரல்புகுந் தீடழிந்தா ரல்லாது
தப்பினா ரில்லையிது தாண்டின்ம கிழ்ச்சிதரும்
ஒப்பிலா னந்தமலை யொன்றங்கு முன்னுளதால்.
|
13
|
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
அஞ்சும்வெவ்
விடர்துற்றி யலமரல் தருமிந்தச்
சஞ்சல மலைமுன்றி னின்றொரு தனியாக
வஞ்சமின் மறைவாணன் மனமிக மறுகுற்று
நஞ்சட வினைவார்போ னைந்திவை நவில்கின்றான்.
|
14 |
|
|
|
|
எவ்வள
வதிகங்கொ லென்னுறு பலவீனம்
அவ்வள வதிகமிவ் வசலம துயர்வாயின்
எவ்வகை நெடுந்தூர வேற்றமிங் கிதையேறி
அவ்வயி னுறுசார லடைகுவ னெளிதன்றால்.
|
15
|