|
பொன்னகர்
புகுமார்க்கம் பூதர நடுவாக
மின்னொளி யெனநேரின் மிளர்வது மிதிகொம்பும்
உன்னவோர் பிடிகொம்பு முளதென வறிகில்லேன்
என்னினிப் புரிகிற்பேன் யாதுமோர் துணையில்லேன்.
|
16
|
|
|
|
|
பின்னிடை
குவனாயி னுறழ்வது பெருமோசம்
நன்னெறி பிசகாமே நனிகடைப் பிடித்தேறி
முன்னிடு குவனாயின் முறையிறை பிறழாத
மன்னவ னொருகைதந் துதவவும் வருவாரால்.
|
17 |
|
|
|
|
முன்னரி
முழையொன்றோ வெரிகனன் முதிர்சூளை
துன்னின ரடியர்க்காய்த் துணைபுரி தருதெய்வ
மன்னவ னஃதோரில் வளரிடர் மலையேறிப்
பொன்னில வுலகூடு புகவருள் புரியார்கொல்.
|
18 |
|
|
|
|
அடர்கடு
வனதீமை யளவள வியபூத
உடலிது விழுகாறு மிடையிடை யுறுதுன்பம்
இடர்பல வுழவாமே யியல்வது முறையன்றாற்
சுடருல குறினன்றோ வருவது சுகநித்யம்.
|
19 |
|
|
|
|
எட்டிமல்
கிடுகாடோ வின்சுவைக் கனியீயுந்
துட்டவெஞ் சிறைவீட்டிற் சோடச வுபசாரங்
கிட்டில வெனலாமோ கேடுறு முலகத்தே
மட்டறு சுகபோகம் விழைவது மடமைத்தால்.
|
20
|
|
|
|
|
அடியவ
ருணர்வுள்ளா ரசடில ரவர்மேலே
படிவன பலதுன்ப மெனினுறு பயன்றேரின்
முடிவினி னலமேயா முறைமுறை யனன்மூழ்கப்
படினொளி நனிமல்கிப் பசுமையுற் றிடுபொன்போல்.
|
21 |
|
|
|
|
ஆதலி
னிடையாமே யணதிகழ் பரலோக
நாதன தருளொன்றே நற்றுணை யெனக்கொண்டு
போதரு குவனென்னாப் பொறியொரு புலனாகப்
பூதர மிசையேறிப் போயினன் வழிகூடி.
|
22 |
|
|
|
|
ஓடுவ
னடைகூடி விரைகுவ னொருகிதம்
பாடுவன் மேனோக்கிப் பார்த்துளம் பதைத்தேங்கி
வாடுவ னிளைப்பாகி மலங்குவ னினவாகக்
கோடுயர் நெறிசேர்செங் குத்தடி குறுகுற்றான்.
|
23 |