பக்கம் எண் :

162

 

கண்டன னினியேற்றங் கடினமிந் நிமிர்குன்றில்
உண்டென மலைந்துள்ள முயங்கிநெட் டுயிர்த்தந்தோ
கொண்டனன் றிகிலேனுங் குறுகுறு நின்றொல்லை
அண்டர்தம் பெருமானை யுள்ளின னவலித்தே.     

24
     
 

விளக்குற விருளோடும் விதமென வருடுன்னி
உளக்கவ லையைநீக்கி யுரங்கொடு காலூன்றத்
துளக்கறு திடநல்கத் துணிவுவந் தருணாதன்
வளக்கரு ணையைவாழ்த்தி யேறினன் மலைமுன்றில்

25
     
 

தைவிக கிருபாஸ்தந் தனைமுன மீர்த்தேக
ஐயமில் விசுவாச மன்வுபின் னணைந்துந்த
மையறு திருவாக்காம் வச்சிர தண்டூன்றி
மெய்யுறு பலத்தாலவ் விலங்கலின் மிசைபோனான்.

26
     
 

பொறியயல் விலகாமற் புலனெதும் விழையாமல்
குறியது தவறாமற் குணநிலை வழுவாமற்
பிறிதெது நினையாமற் பிறங்கலின் மிசைசெல்லும்
நெறியது பிசகாமற் சென்றன நெடுந்தூரம்.        

27
     
 

அடிக்கடி முழந்தாணின் றடருவ னருள்பற்றிப்
பிடிக்குவ னுரத்துன்னிப் பெயர்குவ னினவாகப்
படிக்கிர க்ஷணைநல்கும் பரனியற் றியசெந்தேன்
வடிக்குமொண் மலர்நந்த வனத்தினி லினிதுற்றான்.

28
     
 

            வேறு

 
     
 

கோனகர் புகவருங் கொள்கைத் தாயவெம்
மானவ ரையும்வழி வருத்த மாற்றிடும்
பான்மையிற் றாயகம் புரையும் பண்புள
தூனமில் காட்சிய துவகை பூப்பது.              

29
     
 

சஞ்சல முடித்தலை தயங்கு மாதலில்
விஞ்சிய சுகத்தினை விளக்கு மாலது
வஞ்சமின் மலர்முகங் காட்டி வாய்த்ததேன்
செஞ்செவே தருமன்பர் செவ்வி போன்றது.       

30
     
 

மன்னுநந் தனவனத் தெழின்ம ரக்கிளை
பின்னியும் வல்லிகள் பிணைத்தும் பெட்புற
நன்னறுந் தழைக்கொடி படர்த்தி நாட்டிய
பன்னக சாலையொன் றுளதப் பாங்கரில்.        

 31