|
வருந்திய
வேதிய னிறுத்தம் மாணெழில்
திருந்திய சாலையிற் புகுந்து செவ்விதின்
இருந்திளைப் பாறின னிறைவன் பாதத்திற்
பொருந்துமன் பருச்சனை புரிந்து போற்றினான்.
|
32 |
|
|
|
|
பரமனன்
றருளிய பயணப் பத்திர
வரமனோ கரத்தினை வாசித் தாய்ந்துதன்
கரமலர் சென்னியிற் கவின வெண்டுகில்
நரமகி பதிதரு நலமு முள்ளினான்.
|
33 |
|
|
|
|
அருகனே
யல்லனித் தனைக்கு மாண்டகை
திருவருண் மலிந்தவச் செயலின் செவ்வியென்
றுருகினன் றுதித்தன னுவகை மாமதுப்
பருகினன் களித்தன னயர்வு பல்கவே.
|
34 |
|
|
|
|
மறந்துளக்
களிப்பினான் மயங்கிச் சோர்வடைந்
தறந்தவா விப்பிர னயர்ந்து தூங்கினான்
இறந்தவோர் வெகுளியிற் றீதென் றெள்ளுவர்
சிறந்தவுண் மகிழச்சியின் சோர்வைச் செவ்வியோர்.
|
35 |
|
|
|
|
தூங்கிய
வேதியன் றுயிலு ணர்ந்திலன்
ஒங்கிர வியுங்கதி ரொடுக்கு வானெனா
ஆங்கொரு புண்ணிய னடுத்து ணர்த்துவான்
நீங்கரு மன்பினாத னிகழ்த்து வானரோ.
|
36 |
|
|
|
|
வழிபிடித்
தித்துணை வருந்தி வந்துநீ
கழிதுயில் விளைப்பது கரும மன்றுகாண்
பழிபடு மடிகுடி கெடுக்கும் பாலது
விழிவிழி யோடுதி விரைந்தெ ழுந்தரோ.
|
37 |
|
|
|
|
ஆம்பரி
சுணர்கிலா வசட ராமெனச்
சோம்பிநீ துயிலுமித் துணிவு நன்கதோ
போம்பக லிருட்படாம் போர்க்கும் போதுசென்
மேம்படு நூனெறி விளங்கற் பாலதோ.
|
38
|
|
|
|
|
நித்திரை
சத்துரு வென்னு நீர்மையை
உய்த்துணர்ந் திலைகொலா முயிருக் குட்பகை
வித்தக விருத்தியைக் கெடுக்கும் வெவ்விடஞ்
சித்தநோ வினுக்கொரு செவிலித் தாயரோ.
|
39 |