பக்கம் எண் :

164

 

துற்றிய துயிலுணர்ந் தெழுந்து சோம்பறுஞ்
சிற்றெறும் பாதியின் சீல மோர்ந்துநீ
கற்றுணர் வடைகடைத் தேறு வாயெனா
உற்றபே ராசையோ டுரத்து கூவினான்.         

40
     
 

மீக்கிளர் துடிப்பொடு விளித்த வாசகக்
கூக்குரல் செவித்துளை குறுகி யொல்லெனத்
தாக்கலும் வேதியன் றனுந டுக்குறத்
தூக்கம்விட் டெழுந்தனன் றுணுக்குற் றோடினான்.

41
     
 

பொழுதுபட் டிடும்வரை துயின்ற புன்மையை
அழுதழு துளநினைந் தழுங்கி யேங்கினான்
பழுதறத் துணைபுரி பரம சாஸனம்
முழுதுணர் பேதிய னவல மூடியே.             

42
     
 

பார்த்தில னயற்புறம் பரப ரப்புடன்
கூர்த்தசெந் நெறிக்கொடு குன்றத் துச்சியை
வேர்த்துடல் விதிர்ப்புற விரைந்த டுத்தனன்
சீர்த்தபு மாலையுஞ் செறிந்த தென்பவே.        

43
     
 

அதுபொழு தச்சனு மறச்சந் தேகியும்
எதிர்முக மாய்விரைந் தோடி யேங்கிமெய்
விதிர்விதிர்த் தலறியுள் வெருண்டு மீயுறக்
கதுமென வருவதைக் கண்ணுற் றானரோ.       

44
     
 

அங்கவ ரருகுற வணைந்து தோழன்மீர்
வெங்கொடும் பயங்கரம் விளைந்த மூலமென்
எங்குசெல் கின்றனீ ரெதுகு றித்துளீர்
சங்கட மெவன்கொலோ சாற்று வீரென்றான்.    

45
     
 

ஆரியன் வினவல்கேட் டச்ச னென்னுமப்
பூரிய னையகேள் புனித யாத்திரை
வீரியந் தருமென விரும்பி வந்திவண்
காரியம் பிறிதெனக் கண்டு கொண்டனம்.      

46
     
 

நாசதே சத்துளேம் நாங்கள் நல்வழி
ஈசனார் பதியினி தீட்டு மென்றிதில்
ஊசலா டுளத்தொடு முலவி வந்தனம்
மோசமித் துணையென முன்னு ணர்ந்திலேம்.    

47