|
உன்னருங்
கதிபுகுத் துண்மை நூல்வழி
பின்னிநங் காலடி பிசகிச் சற்றயல்
மன்னிடி லதோகதி மடுத்து வல்லிதிற்
சின்னபின் னம்படச் சிதைக்குங் காண்டியால்.
|
48
|
|
|
|
|
தாவரு
முபாதிமா மலையின் றன்மையை
யாவரே தெரிப்பருன் னிதயந் தேர்ந்ததால்
கேவலர் தம்மிலக் கிள்ளிக் கீரையாப்
பாவனை செய்வர்வாய்ப் பழக்க மட்டிலே.
|
49 |
|
|
|
|
முன்னுற
முடுகினேம் முறைபி றழ்ந்திடாச்
சென்னெறி செலச்செலத் திகிலு மச்சமும்
பன்னருந் துன்பமும் பதைப்பு மேயலால்
என்னெனுஞ் சஹாயமொன் றெதிர்ந்த தில்லையால்.
|
50
|
|
|
|
|
சூலுறு
முகின்மழை துவன்றிப் பெய்தென
மாலுறு திகில்பல வளைந்து துன்பமேன்
மேலுற விழுத்தலின் வெருண்டு யாங்களிப்
பாலுறத் திருமினேம் பட்ட தீதென்றான்.
|
51
|
|
|
|
|
அச்சனீ
துரைத்திட வறச்சந் தேகியாங்
குச்சித னாண்டிரு கோர சிங்கங்கள்
உச்சித மாய்ப்படுத் துறங்கக் கண்டனம்
நிச்சயந் தெரிகிலம் விழத்த நீரவோ.
|
52
|
|
|
|
|
அடுத்தன
மாயினெம் மங்கம் பீறிவாய்
மடுத்திடுங் கூற்றுவன் மறந்தெம் மாவியை
விடுத்தன னோவெங்கண் மேலை யோர்தவங்
கொடுத்தவோ வெமக்குயிர் யாது கூறுகேம்.
|
53
|
|
|
|
|
என்றுளக்
கலக்கமோ டியம்பி னானிருள்
துன்றிய மனத்திரு வோருந் தொல்வினை
பின்றைநின் றுந்திடப் பேய்கொண் டாரெனக்
குன்றதோ முகமுறக் குப்புற் றேகினார்.
|
54
|
|
|
|
|
வெருவியோ
ருரைத்தவவ் வார்த்தைநெஞ்
சுருவிட வுள்ளுடைந் துயங்கி வேதியன்
புரிவதென் னினியவர் புறமிட் டோடுதல்
கருமமன் றாலெனக் கருத்துள் ளுன்னுவான்.
|
55
|