|
மீவ
ணக்கிய கொம்பரின் வேய்நறும்
பூவ ணக்கொடி பின்னிய பொற்புறு
காவ ணத்துயி லேகவர்ந் திட்டதென்
ஆவ ணத்தையென் றுள்ளின னாரியன்.
|
64 |
|
|
|
|
ஒல்லை
யிற்றன்னு றக்கப்பி ழைநினைந்
தெல்லை யில்பெரு மூச்சினி ருதயக்
கல்லை நூறிக்க ரைந்துமன் றாடினான்
தொல்லை யம்பரன் சந்நிதி துன்னியே.
|
65 |
|
|
|
|
ஆய
போதின ருள்வழி யாவியில்
மேய தோர்சிறி தாறுதன் மீண்டினிப்
போய வண்டுரு விக்கொடு பூதரங்
காயி னன்படு முன்படப் பேனெனா.
|
66 |
|
|
|
|
அறங்கு
லாமனத் தந்தண னந்தனப்
புறங்கு லாமலர்க் காவணம் போதர
இறங்கு வான்விரைந் தின்னலொ டேமனங்
கறங்கு போற்சுழ லக்கரை வானரோ.
|
67
|
|
|
|
|
ஆவிக்
காறுத னல்கவென் றாக்குபூங்
காவிற் கண்டுயின் றூன்பொதி காயத்தைப்
பூவிற் போற்றிய புல்லிய னாகுமிப்
பாவிக் கெங்ஙனம் வாய்க்கும்ப ரசுகம்.
|
68
|
|
|
|
|
புவன
போகப்பு லாலைப்பு சிக்கவே
தவன முற்றத நுகர ணங்களோ
டவனி சுற்றிய ழிமதிக் காத்தும
கவன மென்றுவ ருங்கடைத் தேறவே.
|
69
|
|
|
|
|
சாந்த
னைக்குந்து ணைபுரி சாஸனஞ்
சோர்ந்து வீழச்சு வரணை யின்றியோர்
பாந்தள் போற்றுயில் கொண்டப யித்தியம்
மாந்த ருக்குளுண் டாங்கொலிவ் வையத்தே.
|
70 |
|
|
|
|
ஆக்கை
பேணியு மாவன வீட்டியுங்
காக்கை யேகட னாக்கொண்டு காப்பினும்
போக்கி யென்னைப்பி றக்கணித் தொல்லைமண்
சேக்கை சேதுமன் றென்செயத் தக்கதே.
|
71
|