பக்கம் எண் :

169

 

எண்ண ரும்பொரு ளீதெனக் கண்டெடுத்
துண்ணி கழ்ந்தவுரிமையின் முத்தமிட்
டண்ணல் நாடடைந் தானென வானந்தக்
கண்ணி னீர்வடித் தானுட்க சிந்தரோ.
           

80
     
 

மாண்ட யாக்கைம றுத்துயிர் பெற்றெனக்
காண்டல் செய்திரு கைத்தலஞ் சென்னியிற்
பூண்டு நல்லுணர் வோடுபு ரந்தர
ஆண்ட கைக்கித யாஞ்சலி யாக்கினான்.          

81
     
 

இற்றி தேயெனக் கீறின்மெய் ஜீவனும்
கொற்ற வன்றிருக் கோபுர வாயிலுக்
குற்ற சான்றுமென் றோகையோ டொண்ணெறி
பற்றி யேகினன் கோன்முறை பற்றியே.            

82
     
 

கங்கு லூடிரை தேர்கொடுங் கான்விலங்
கெங்க ணுந்திரி யுங்கண்ணெ திர்ப்படில்
நுங்கு மென்னையு மென்றுநு னித்துணர்
புங்க வன்னிடை நின்றிலன் போயினான்.          

83
     
 

அஞ்சி யஞ்சிய லக்கணுற் றாரியன்
மஞ்சு லாமலை யுச்சிவ ராமுனம்
எஞ்சி யத்தத்தி றுத்தனன் வான்கதிர்
சஞ்ச லத்திற்ற ரிப்பரி தென்னவே.               

84
     
 

திக்க னைத்தும்வி ளக்கிய செங்கதிர்
மைக்க ருங்கட லூடும றைதலிற்
செக்கர் வானொளி தேயுமுன் றீவிரித்
தக்கி ரித்தலை மீதுவந் தண்மினான்.              

85
     
 

பொழுது பட்டிருள் பட்டதென் போக்கினிப்
பழுது பட்டிடு மென்னும்ப யத்தினால்
அழுது நொந்தவ லத்தொடு மண்ணல்தாள்
தொழுது நோக்கினன் முற்படு தொன்னெறி.         

86
     
 

                   வேறு

 
     
 

முற்பட நோக்குங் காலை முறைப்படு நெறியின் பாங்கர்
கற்பக வுலகை யுள்ளங் கைநெல்லிக் களியிற் காட்டும்
அற்புத வுருக்கொ லீதென் றதிசயம் பயக்கு மாறு
பொற்புற விளங்கித் தோன்றும் புனிதமா ளிகைகண் ணுற்றான்.

87