|
தெள்ளிய
நறிய தூய செழுஞ்சுதை மிளிரத் தீற்றி
வெள்ளியங் கிரியிற் றோன்றும் வியனிலை மாட நின்றும்
எள்ளரு மகர யாழி னெழால்மிடற் றொலியோ டொன்றித்
துள்ளிய மதுர கீதஞ் செவித்தொளை தொகுத்த தன்றே.
|
88 |
|
|
|
|
கண்டுகேட்
டுளமுங் கண்ணுங் களிப்புறீஇக் ககோள நாதன்
மண்டல வனத்த லைந்து வான்வழி பிடித்துச் செல்லுந்
தொண்டருக் காக்கு வித்த துரிசின்மா ளிகையீ தென்ன
ஒண்டவன் கருதி வல்லே யுறுவது கரும மென்னா.
|
89 |
|
|
|
|
பொருக்கென
வேகுங் காலை புறத்துலாஞ் செக்கர் மாண்டு
கருக்கல்வந் துற்ற தாகக் கானகத் துழல்வி லங்கின்
வருக்கநின் றுரற்று மோசை செவித்தொளை மறித லோடும்
வெருக்கொளீஇக் கலக்க முற்று வேதியன் கவல லுற்றான்.
|
90
|
|
|
|
|
புந்தியற்
றயர்ந்து தூங்கிப் பொழுதுவீண் போக்க டித்துக்
கொந்திருட் படலம் போர்ப்பக் கொடுவிலங் குழலுங் காட்டில்
வந்திடர்ப் படுவன் பாவ மயற்றுயில் விளைத்த மோசம்
இந்தவா றாய துய்வுக் கென்னினிச் சூழ்ச்சி மாதோ.
|
91 |
|
|
|
|
என்னுறு
மதியீ னத்தா ரிப்பெருந் திகிற்குள் ளாகிச்
சின்னபின் னங்க ளாகச் சிதைவலென் றழுங்கு கின்றேன்
முன்னுறக் காவா னாகி யிழுக்கியான் பிழையை முன்னிப்
பின்னர்நூ றிரங்கு மென்ற தெருளுரை பிழையாங் கொல்லோ.
|
92
|
|
|
|
|
இருண்டகா
னெறிமுன் செல்லா தெதிரிடை யூறுக் கஞ்சி
வெருண்டுபின் னிடைவ னாகில் விடுங்கொலோ வேந்தன் கோபம்
தெருண்டமே லவர்தம் ஜீவன் சிதையினு மறந்தி றம்பி
மருண்டுவை யகத்து வாழ்வை மதிப்பரோ மதியற் றார்போல்.
|
93
|
|
|
|
|
சந்தேகி
யச்ச னென்ற சழக்கர்போற் றிரும்பி யேகில்
வெந்தேநீ றாதல் வேண்டும் விண்ணின்று விழுவெந் தீயில்
முந்தேமற் றிதையுற் றாய்ந்து முடுகியிந் நெறியைப் பற்றி
வந்தேனிங் கிடையூ றஞ்சி மலங்குதன் மடமை யாமால்.
|
94 |
|
|
|
|
மறமெலாங்
குடிகொ ணாச தேசத்தை மருவில் ஞானத்
திறமெலா மழியுஞ் சிந்தைச் செறிவெலா நெகிழ்ந்து தேயும்
அறமெலாஞ் சிதையுந் தீரா வனர்த்தமே விளையு மன்றிப்
புறமெலா நகைசெய் தேசும் பின்னிடல் புலமைத் தன்றால்.
|
95
|