|
தேவாரம்
(பண், இந்தளம்.)
|
|
|
|
'கிறிஸ்துவே
எனக்கு எல்லாமாயிருக்கிறார்.'
|
|
|
1.
|
சத்தாய்
நிஷ்களமா யொரு சாமிய மும்மிலதாய்ச்
சித்தா யானந்தமாய்த் திகழ் கின்றதி ரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத் தேறுவ னென்பவந்தீர்ந்
தத்தா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
2.
|
எம்மா
விக்குருகி யுயிரீந்துபு ரந்ததற்கோர்
கைம்மா றுண்டுகொலோ கடை காறுங் கையடையாய்ச்
சும்மா ரக்ஷணைசெய் சொல்சு தந்தரம் யாதுமிலேன்
அம்மா னுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
3.
|
பித்தே
றிச்சுழலும் ஜெகப் பேய்பிடித்து துப்பவத்தே
செத்த னுன்னருளாற் பிழைத் தேன்மறு ஜென்மமதாய்
எத்தோ டங்களையும் பொறுத் தென்றுமி ரங்குகவென்
அத்தா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|
|
|
4.
|
துப்பார்
சிந்தையிலேன் மறைந் தீட்டிய தொல்வினையுந்
தப்பா தேவெளியா நடு நாளெனைத் தாங்கிக்கொள்ள
இப்பா ருய்யவென்றே மனுக் கோலமே டுத்தவெங்கள்
அப்பா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.
|