பக்கம் எண் :

172

5.



மையார் கண்ணிருண்டு செவி வாயதை துக்குழறி
ஐயான் மூச்சொடுங்கி யுயி ராக்கைவிட் டேகிடுநாள்
நையேல் கைநெகிழே னுனை நானுண் டஞ்சலென
ஐயா வுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
6.



வான்றோய்ந் திட்டதன்றோ தமி யேன்புரி வல்வினைதான்
என்றா னிவ்வுலகில் ஜெனித் தேனென லீடழிவேன்
மூன்றாய் மூன்றுமொன்றாய்த் தொழின் மூன்றுமி யற்றிநின்ற
ஆன்றோ யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
7.



திரைசேர் வெம்பவமாங் கடன் மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்கவென்றே புணை யாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலே னெனைப் பற்றியப் பற்றுவிடாய்
அரசே யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
8.



தாயே தந்தைதமர் குரு சம்பத்து நட்பெவையும்
நீயே யெம்பெருமான் கதி வேறிலை நிண்ணயங்காண்
ஏயே யென்றிகழு முல கோடெனக் கென்னுரிமை
ஆயே யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
9.



என்னேர் பாவியர்தா னுல கத்திலை யென்னினுமுன்
பொன்னே ருங்கழற்கே புக லாக வந்தடைந்தேன்
மன்னே ரக்ஷணிய வமிர் தூட்டும னுப்புரக்கும்
அன்னே யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 
10.



ஈண்டே யென்னுளத்தில் விசு வாசவி ளக்கிலங்கத்
தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்துகெ டுத்திடுங்காண்
மாண்டா யெம்பிழைக்கா வுயிர்த் தாயெமை வாழ்விக்கவே.
ஆண்டா யுன்னையல்லா லெனக் கார்துணை யாருறவே.

 

               தேவாரம் முற்றிற்று

   

இன்னிசை பாடி யேகு மேல்வையி னிரண்டு பாலுந்
துன்னிய புதரி னூடே சுருங்கிய நெறியின் பாங்கர்
மன்னிரு கோர சிங்க மறிந்திடு நிலைகண் டேங்கித்
தன்னிலை கலங்கி நெஞ்சந் துணுக்குறீஇத்தமியன் றேர்வான்.

100
 

ஆங்கவர் கண்டு சொற்ற வடுந்திறல் வயதெஞ் சீயம்
ஈங்கிவை போலு மென்க ணெதிர்ப்படு மிரண்டு மெஞ்சித்
தூங்குவ வல்ல நின்று துயல்வரு கின்ற யாண்டும்
பாங்குற வகலத் தக்க பரிசெது மின்று பார்க்கில்.         

101