| |
ஆற்றெதிர்ப்
பட்ட துன்புக் களவிலை யவற்றால் யானோர்
காற்றெதிர்ப் பட்ட பூளை யாயினன் கருணை வேந்தன்
தேற்றெதிர்ப் பட்ட தாலோர் தீங்கின்றி வந்தே னீண்டிக்
கூற்றெதிர்ப் பட்டேன் வாணா ளின்றொடுங் குறுகிற் றேயோ.
|
102
|
| |
|
|
| |
நேருறத்
துணிந்து செல்லின் னினைப்பதன் முன்னம் பீறிக்
கோரவெம் பகுவா யார விழுங்கிடுங் கொள்கைத் தம்மா
ஆரிவற் றிடையிற் சென்றிங் காவிபெற் றுய்வ ரிந்தக்
காரியங் கண்டன் றோவவ் விருவருங் கடுகி மீண்டார்.
|
103
|
| |
|
|
| |
உயப்படு
மார்க்க மாமிவ் வோரடித் தடத்தை விட்டிங்
கயற்புறம் விலகி யேகி னாவதன் றதோமு கங்கொண்
மயற்படு குழியுள் வீழ்ந்து மடிவது திண்ண மென்னே
செயப்படு முபாய மீண்டு திருமுதல் சீரி தன்றால்.
|
104 |
| |
|
|
| |
பண்டுகோ
ளரிவாய் கட்டிப் பத்தனைப் பாது காத்த
அண்டர்நா யகன லாலிவ் வாபத்துக் குதவு வார்யார்
உண்டெனக் குறுதி யென்னா வுள்ளியுள் ளூக்கந் தோன்றித்
தெண்டனிட் டுரக்கக் கூவி ஜெபித்தனன் சிந்தை யொன்றி.
|
105
|
| |
|
|
| |
ஆகுலத்
துடன்வா னோடக்கி யழுதுமன் றாடிக் கூவுங்
காகுளி வான மெட்டக் கதித்தபே ரோசை கேட்டுக்
கோகுல மாட வீரிப் புறக்கடை குலவிக் காக்கும்
சோகமில் சாவ தானி தன்னுளே சூழுங் காலை.
|
106 |
| |
|
|
| |
மேக்குயர்
பரலோ கத்து விபுதரா யனைவி ளித்த
வாக்கிது வயவெஞ் சீய மறிதல்க்டஞ்சி யிட்ட
கூக்குர லிதுவென் றோர்ந்தென் வார்த்தையைக்குறிக்கொ ளென்னா
மீக்கிளர் சத்தத் தோடும் விளித்துமற் றிதனைக் கூறும்.
|
107
|
| |
|
|
| |
வெஞ்சின
மடங்கற் கஞ்சி விளித்தனை போலு மெம்பி
அஞ்சிடே லஞ்சி டேனீ யருந்தளை காலிற்பூட்டிச்
செஞ்செவே தொடரின் மாட்டிச் சிறையிடு வித்த துண்டால்
விஞ்சியோர் தீங்கு செய்ய விறலின்றிங் விநய மோர்தி.
|
108
|
| |
|
|
| |
கால்வழி
பிசகா துள்ளங் கலங்காது கடவுள் வேந்தன்
கோல்வழி யிழுக்கா வண்ணங் குறிக்கொளீஇ யமைத்த வேத
நூல்வழி யுரத்து மத்தி நுனித்தடி பெயர்த்து வந்திப்
பால்வழி பிடித்தி நெஞ்சிற் பதியிது பரமார்த் தங்காண்.
|
109
|