|
தீயினுங்
கொடிய கோடி துன்பங்கள் செறினு மாவி
மாயினும் ஜீவ மார்க்க வரம்புநீ யிகப்பா யல்லை
ஆயினு நடுவி கந்தோ ரணுத்துணை பிசகி யோர்பாற்
சாயினுந் தீங்கு வந்து சாருமென் றறிதி தக்கோய்.
|
110
|
|
|
|
|
என்றவ னிசைத்த
வார்த்தை யெனுஞ்சுவை யமுதத் தோடு
சென்றுநின் றுழலும் ஜீவன் செவிவழி புகுதத் தேறி
வென்றிசே ரரச னுய்த்த விழுத்திரு வாக்கீ தென்ன
நன்றியோ டுள்ளிப் போற்றித் துதித்திது நயந்து செய்தான்.
|
111 |
|
|
|
|
கச்சையை
யிறுக்கிக் கட்டிக் கால்நிலைத் தூன்றிக் கையில்
வச்சிர தண்டொன் றேந்தி நடுநிலை வழுவா வண்ணம்
உச்சித விசுவா சத்தி னுரங்கொண்டங் குற்று நோக்கி
நிச்சய நுண்ணூன் மார்க்க நெறிகடைப் பிடித்து நின்றே.
|
112 |
|
|
|
|
வானநா யகனை
யுள்ளி மானதாஞ் சலிவ ழங்கி
மோனமாய் முன்னிட் டேக முயன்றடி பெயர்க்கும் போழ்திற்
கானகத் துழல்வி லங்கின் கணநிலை குலைந்துசாயத்
தானவா ரணங்க ளேங்க முழங்கின தறுகட் சீயம்.
|
113 |
|
|
|
|
முதிர்சினந்
திருகிக் கான முடங்குளை மடங்கலெங்கும்
அதிர்பட முழங்கிப் பொங்கி யடுத்தடுத் துரறி யார்ப்ப
எதிரோலி யெழும்பி நால்வா யிருங்களிற் றியானை மூளை
பிதிர்பட வுருமி னோசை பிறங்கிய தடவி யெங்கும்.
|
114 |
|
|
|
|
தெற்றென
மறையோ னுள்ளந் துணுக்குற்றுத் திகைத்ததேனும்
நற்றவம் பயின்ற தாலே நடுநிலை தவறா னாகி
மற்றெதி ரூன்றி முன்னே வைத்தகால் பின்வாங் காமல்
வெற்றொலி யிதுவென் றெள்ளி நடந்தனன் விறல்கொள்வீரன்.
|
115 |
|
|
|
|
இருட்டையூ
டறுத்து முன்சென் றெதிருற வணைந்து சீறி
வெருட்டுவெம் மடங்கல் வாயுட் புக்குடன் மீண்டா னென்ன
அருட்டுணை யாலே யந்த வாபத்துக் ககன்று போனான்
திருட்டுவா யலகைக் குண்டோ தொண்டனைச் செயிக்குந் தீரம்.
|
116
|
|
|
|
|
பாம்பின்வாய்த்
தேரை மீண்ட பரிசெனப் படருண் மூழ்கித்
தூம்புறழ் பகுவாய்ச் சீயச் சுவட்டிடை மறிந்த போந்து
மேம்படு தரத்தின் மேய வேதியற் குற்ற வெற்றி
ஒம்படை யாகக் காத்த வுன்னதத் தொருவர் பாற்றே.
|
117 |