பொருட்டிற னறியார் சொல்லும் பொய்யுரைக் கொருகாற் சற்று மருட்டிமுன் னின்று மெய்மை மறைக்குமோர் வலியுண் டேனும் அருட்டிற னுடைய நீரா ரவலத்தோ டுரைக்கு மெய்மை தெருட்டுவா ரறினுந் தானே திகழ்ந்திடுஞ் செவ்வி யுண்டால்.
கடுங்கத மடங்க லேற்றின் கைதப்பி யகன்று போன அடுங்களி றனையான் சித்த மமைதலுற் றாறி ஜீவன் நடுங்குற வெதிர்ந்த மோச நாசத்தி லுயிர்தந் துய்த்த ஒடுங்கலில் கருணைத் தேவை நன்றியோ டுள்ளி யுள்ளி.
அஞ்சலித் தோகைக் கண்ணீ ரவிழ்ந்துதன் னங்கம் போர்ப்பத் துஞ்சுறா வன்பிற் பல்காற் றொழுதுதோத் திரித்துப் பாடி உஞ்சன னளிய னேனென் றுவந்துதன் னெறியிற் சென்றான் எஞ்சிய கருக்கன் மாயக் காரிரு ளிறுத்த தன்றே.
உபாதிமலைப் படலம் முற்றிற்று
ஆதிபருவம் கவி, 116