|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வெய்யவ
னிறத்தலிற் பரிந்து மேதினித்
தையலாள் துக்கவெந் தழல்சு டச்சுட
மெய்யெலாங் கருதிய விதத்தை மானுமால்
வையக முழுவதும் புதைத்த மையிருள்.
|
1 |
|
|
|
|
செஞ்சுட
ரவிரொளிப் பிழம்பைத் தீக்குமோர்
நஞ்சிது வென்னவு நாச தேசத்துப்
பஞ்சபா தகத்திரள் படர்ந்த தென்னவும்
விஞ்சிய திருட்குழா மேலுங் கீழுமே.
|
2
|
|
|
|
|
அஞ்சுட
ரவித்துவந் தகிலம் யாவையும்
வஞ்சனை யுருக்கொடு கரந்து வௌவிய
அஞ்சனக் கருநிறத் தரக்கி யேகொலாம்
செஞ்செவாய் மடுத்துறச் செறிந்த காதிருள்.
|
3 |
|
|
|
|
அலைகடற்
புவியில்வா ழான்ம கோடிகள்
நிலைதபக் கொடுந்தொழி னினையும் பேய்க்கணத்
தலைமக னிடைக்கிடை வீசு தந்திர
வலையென விரவிருள் வளைந்த தெங்குமே.
|
4
|
|
|
|
|
பள்ளநீ
ருலகெலாம் படிந்த வெந்நிசி
நள்ளுந ராமென நடித்து நாடருள்
கள்ளமும் வஞ்சமுங் கரந்த கைதவர்
உள்ளமு நரகபா தலமு மொத்தவே.
|
5
|