(பொ
- ரை) திருவருள் மிகுந்து செங்கோல் செலுத்தி
இப்பூச்சக்கரம் முழுவதையும் ஒரு குடைநிழற்கீழ்க் கொணர்ந்து
பிரியத்தோடு ரட்சித்தருளுகின்ற கடவுள் வேந்தன் தனது
வெற்றிக்குடையின்கீழ் வாழுகின்ற நிலைபெற்ற ஜீவகோடிகளுக்கெல்லாந்
தந்திருக்கின்ற பிரமாணம் பத்து ஆகும். அவற்றைத் தனித்தனியாக நான்
சொல்லுவேன், கேளுங்கள்.
|
நம்மையே
வணங்கல் வேண்டும் நமக்கிணை யாக வேறோர்
பொம்மையைப் புனைர்ந்து தாழ்ந்து போற்றிடா திருங்கள் வீணே
நம்மது நாமஞ் செப்பி னாசமே வருந்தப் பாது
செம்மைசே ரோய்வு நாளைச் சிந்தையாற் றூய்மை செய்மின். 17
|
(பொ
- ரை) நம்மையே வணங்கவேண்டும். நமக்கிணையாக
வேறோர் பொம்மையை உண்டாக்கி அதற்குமுன் பணிந்து அதைப்
போற்றவேண்டாம். நமது நாமத்தை வீணிலே வழங்கினால் தப்பாமல்
நாசமேவரும். சிறப்புப் பொருந்திய ஓய்வுநாளை மனதினால் பரிசுத்தமாய்
ஆசரியுங்கள்.
|
நலத்தொடு
தந்தை தாயை நனியுப சரித்தல் நன்றாம்
கொலைத்திறந் துரிச்சை நீசங் களவுபொய்க் கூற்றென் றாய
புலைத்தொழில் புரிய லாகா புறத்தவன் பொருள்யா தொன்றை
அலைத்தப கரிக்க வெண்ணு மாசையை யடர்த்தல் வேண்டும். 18
|
(பொ
- ரை) தந்தையையும் தாயையும் சகல நன்மைகளோடும்
நன்றாய் உபசரித்தல் தர்மம். கொலை, துர்இச்சை என்னும் இவை ஈனம்.
களவு, பொய் என்ற புலைத்தொழில்களைச் செய்யலாகாது.
புறத்தியானுடைய பொருள் யாதொன்றைவும் கைப்பற்றி அபகரிக்க
எண்ணும் ஆசையை நீக்கல்வேண்டும்.
|
என்றிவை
சிலையிற் றீட்டி யெம்மனோர் கரத்து நல்கி
நன்றுநீ ரடைய வேண்டி னயந்தனுட் டியுமிப் பத்தில்
ஒன்றுமீ றிடினு மந்தோ வொருங்குதீச் சிறைக்குள் ளாவீர்
இன்றுமீட் பென்றுசொன்னா ரிறையவன் யானுங் கேட்டேன். 19
|
(பொ
- ரை) என்ற இவற்றைக் கற்பலகையின்மேலெழுதி
எம்போல்வாருடைய கரத்திற்கொடுத்து நீங்கள் நன்மையை யடைய
விரும்பினால் இவற்றை விருப்பத்தோடு அநுஷ்டியுங்கள். இப்பத்துப்
பிரமாணத்துள் ஒன்றை மீறினாலும் நீங்கள் யாவரும் தீ நரகத்துக்கு
ஆளாவீர்கள். அதினின்று மீளுதல் இல்லை என்று கடவுள் சொன்னார்,
நானும் கேட்டேன்.
|
புவனமன்
னுயிர்க ளிந்தப் பொதுவிதிப் பிரமா ணத்தை
அவமதித் தொழுகுங் காலை யவரவ ரகத்து வாழுந்
தவலரும் ஜீவ சாக்ஷி தடுப்பனத் தடையை மீறிற்
குவலயா திபனுக் கெல்லாங் கூறிமுன் னிற்பன் மாதோ. 20
|
|