(பொ
- ரை) பூமியில்வாழும் நிலைபெற்ற ஜீவகோடிகளெல்லாம்
யாவருக்கும் பொதுவிதியாகிய இந்தப் பிரமாணத்தை அவமதித்து
நடக்கின்றபோது அவரவருடைய ஹிருதயத்துள வாழுகின்ற கெடுதலில்லாத
மனச்சாக்ஷி தடுக்கும். அத்தடையை மீறினால் லோகாதிபதியாகிய
ஈஸ்வரனுக்கு அம்மனச்சாக்ஷியானது சகலத்தையுங்கூறி அவனுக்கு முன்
நிற்கும்.
|
ஆதலாற்
பரம ராஜ னருடச விதிகைக் கொண்டு
மேதகு ஜீவ சாஷி விரோதமின் றாக வோம்பித்
தீதொரீஇ நன்மை செய்து செம்முறை திறம்ப லின்றிக்
கோதறு நெறியி னிற்றல் குடிகடங் கடமை யாமால். 21
|
(பொ
- ரை) ஆதலாற் பரமராஜன் அருளிய
பத்துப்பிரமாணத்தையுங் கைக்கொண்டு, மனச்சாக்ஷிக்கு விரோதமில்லாமல்
அவற்றைப் பாதுகாத்து, தீமையை விலக்கி நன்மையைச் செய்து, சிறந்த
முறைதவறாது, குற்றமற்ற நன்னெறியில் நடத்தல் குடிகளுடைய
கடமையாகும்.
|
நாமுநாம்
வசிக்கு மிந்த நாசதே சத்து ளாரும்
கோமுறை வழுவாத் தூய கொற்றவன் றனைப்போற் றாமல்
தீமுறை துணிந்து செய்யும் ஜெகப்புலை யனுக்காட் பட்டுச்
சாமுறை துணிந்து நின்று சருவசண் டாள ரானோம். 22
|
(பொ
- ரை) நாமும் நாம் வசிக்கும் இந்த நாசதேசத்துள்ளோரும்
ராஜ நீதி தவறாத பரிசுத்தமான அரசனைப்போற்றாமல்,
துர்க்கிருத்தியங்களையே துணிந்து செய்கின்ற ஜெகப்புலையனாகிய
சாத்தானுக் கடிமைப்பட்டு சாவுக்குள்ளாக்கும் முறையில் துணிந்து, அதில்
நிலைகொண்டு நின்று, சர்வ சண்டாளரானோம்.
|
நீணிலத்
தவர்ந கைக்க நினைப்பின்றி யிறைவன் பேரை
வீணிலே யுழறி யந்தோ வீணர்க்குள் வீண ரானேம்
மாணுறு மோய்வு நாளை மதியாது மதியுங் கெட்டோம்
பேணினோ மிலைப்பெற் றோரைப் பேயரிற் பேயர் யாமே. 23
|
(பொ
- ரை) அகன்ற பூவுலகத்திலுள்ளவர்களெல்லாரும்
நகைக்கும் படி ஒரு நினைவுமில்லாமல் கடவுளுடைய திருநாமத்தை
வீணிலே வழங்கி, ஐயையோ வீணருக்குள் வீணரானோம். மாக்ஷிமைப்பட்ட
ஓய்வுநாளை மதியாமல் அறிவுங் கெட்டுப்போனோம். பெற்றோரைப்
பாதுகாத்தோமுமில்லை. பேயருக்குள் பேயர் நாமே.
|
நன்மைசெய்
தோமு மில்லை நன்மைசெய் வதற்குத் தக்க
தன்மையு நமக்கு ளில்லை சார்வதா நன்றி கெட்ட
புன்மையுங் களவுஞ் சூதும் பொறாமையும் புரட்டும் பொய்யும்
வன்மமும் பகையு முள்ளே மறத்தொழில் பயின்று வாழ்வோம். 24
|
|