பக்கம் எண் :

19

     (பொ - ரை) நன்மை செய்தோமுமில்லை. நன்மை செய்வதற்குத்
தக்க தன்மையும் நமக்குள் இல்லை. நன்றிகேடாகிய இழிவும், களவும்,
சூதும், பொறாமையும், புரட்டும், பொய்யும், வர்மமும், பகையும்
எப்பொழுதும் உடையேம். பாவத்தொழில்களையே எப்பொழுதும் பயிற்சி
செய்து வாழ்கின்றோம்.

 
   

நம்பர மாக வைத்த நலனுறு பொருளைப் பேணி
இம்பரூ தியஞ்செய் யாம லிருநிலம் புதைத்து வைத்தேம்
அம்பர லோக ராஜ னணுகிநங் கணக்கை யாயில்
வம்பரில் வம்ப ரென்று மாதண்டம் விதிப்ப ரன்றோ. 25

     (பொ - ரை) நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட நலம பொருந்திய
பொருளைப் பாதுகாத்து இவ்வுலகத்தில் விருத்தி செய்யமால், அதைப்
பெரிய பூமியில் புதைத்து வைத்தோம். பரலோக இராஜன் நம்மண்டை
வந்து நமது கணக்கை ஆராய்ந்து பார்க்கும்பொழுது நம்மை
வம்பருக்குள்ளே வம்பர் என்று தீர்த்து நமக்குப் பெரிய தண்டத்தை
விதிப்பாரன்றோ!

 
   

அச்சுத னாய வேந்த னருளினா லுபக ரிக்கும்
உச்சிதமான வாழ்வை யுவக்கிலே முலர்ந்த வென்பை
நச்சியிங் குழலு நாய்போ னலமிலா நாச தேசக்
குச்சித வாழ்வை நச்சிக் கொண்டலை கின்றேம் யாமே. 26

     (பொ - ரை) அழிவில்லாத கடவுள் வேந்தன் தமது அருளினால்
நமக்கு உபகரிக்கின்ற உச்சிதமான வாழ்வை நாம்
விரும்புகின்றோமில்லை. காய்ந்த தசைப்பற்றில்லாத எலும்பை விரும்பித்
திரிகின்ற நாயைப்போல யாதொரு நலமுமில்லாத நாசதேசத்தின்
அருவருப்பான வாழ்வை விரும்பி அலைகின்றோம்.

 
   

வென்றிசே ரரசன் றந்த விதிவிலக் கெவையு மீறிக்
கன்றிய மனத்த ராகிக் காமியச் சுவையை நாடிச்
சென்றனங் கடிந்து கூறும் ஜீவசா க்ஷியையுந் தேய்த்துக்
கொன்றுளே யடக்கி வைத்தேங் கொடுமையிங் கிதில்வே
                                      றுண்டோ. 27

     (பொ - ரை) ஜெய ராஜனாகிய ஈஸ்வரன் கொடுத்த
விதிவிலக்குகள் யாவற்றையும் மீறிக் கொடிய மனத்தராகிச் சிற்றின்பச்
சுவையை நாடிச் சென்றோம். நம்மைக் கடிந்து தடுக்கின்ற ஜீவசாக்ஷியையும்
தேய்த்து, கொன்று, அதினுடைய சப்தம் வெளிவராதபடிக்கு அடைத்து
வைத்தோம். இதைப்பார்க்கிலும் கொடுமை வேறுண்டோ?

 
   

மருங்கெரி கதுவத் தூங்கு மாசுண முணரா தாங்கு
நெருங்கிய வரசன் சீற்ற நெருப்பினா னாச தேசம்
ஒருங்கவிந் தொழியுங் கால முற்றதை யுணரே மாகி
நடுங்குடற் போக மென்றே நச்சிநாட் கழித்தல் நன்றோ. 28