(பொ
- ரை) பக்கத்தில் அக்கினியானது
நெருங்கிக்கொண்டிருக்கும் போதும் தூங்குகின்ற மலைப்பாம்பு
தன்னிலையை யுணராதிருத்தல்போல, நம்மைச் சமீபித்துக்கொண்டிருக்கின்ற
பரம ராஜனுடைய கோபாக்கினியினால் நமது நாடாகிய நாசதேசம் வெந்து
ஒழியப்போகின்ற காலம் வந்துவிட்டதை உணராதவர்களாகி, அழியும்
தன்மைத்தாகிய சரீரபோகமொன்றையே விரும்பி நம் வாணாளை
வீணாளாகக் கழித்தல் நல்லதோ?
|
நந்துநான்
யாரே னிங்கு நாடினே னலமே நல்கி
இந்தமட் டெனைப்பு ரந்தாற் கென்கடன் யாவென் செய்தேன்
வந்திடுங் கதியென் னென்று மாவிசா ரஞ்செய் யாது
சிந்தையற் றுழலு மாந்தர் ஜென்மமும் ஜென்ம மாமோ. 29
|
(பொ
- ரை) விரும்புகின்ற நான் யார். ஏன் இங்கு நாடிவந்தேன்
இதுவரையுமெனக்கு நன்மையே யீந்து என்னை இரட்சித்தவருக்கென்
கடமைகள் யாவை? நான் என்ன செய்தேன்? எனக்கு வரக்கூடிய கதி
என்னவென்று பெரிய விசாரங்கொள்ளாமல் இவற்றைக்குறித்து யாதொரு
சிந்தனையுமின்றித் திரியும் மாந்தருடைய ஜென்மமும் ஜென்மமாமோ?
|
காட்சியாற்
கருத்தாற் காணுங் காசினிப் பொருள்கள் யார
தாட்சிமற் றவர்க்குச் சொந்த மாயகா ரணமே தம்மான்
மாட்சிசால் குணமெவ் வாறு வந்திடுங் கதியென் னென்று
சூழ்ச்சியற றிருக்கு மாந்தர் சுமையன்றோ நிலத்துக் கம்மா. 30
|
(பொ
- ரை) காட்சியாலும் கருத்தாலும் நாம் காண்கின்ற காசினிப்
பொருள்கள் யாருடைய ஆட்சிக்குட்பட்டவை? மற்றவர்களுக்கு இவை
சொந்தமான காரணம் யாது? ஆண்டவருடைய மாட்சிமைபொருந்திய
குணங்கள் எப்படிப்பட்டவை? வரப்போகுங் கதியென்ன? என்னும்
ஆராய்ச்சியில்லாதிருக்கும் மனிதர் பூமிக்குப் பாரமன்றோ?
|
தன்னைத்தன்
னிலையை மேலாந் தலைவனை யவன்சித் தத்தை
முன்னைத்தா னறிந்து பின்னர் முறையறிந் தொழுகல் வேண்டும்
பின்னைத்தா னறிது மென்றல் பெரும்பிழை பெரிது மோசம்
என்னத்தான் கவலு கின்றேன் யாதுநீர் கவலு கில்லீர். 31
|
(பொ
- ரை) தன்னையும் தன்னிலையையும் எல்லாவற்றிற்கு
மேலாகிய தலைவனையும் அவன் சித்தத்தையும் முன்னாக அறிந்து
பின்னாக நடக்கவேண்டிய முறைமையையும் உணர்ந்து ஒழுகவேண்டும்.
பின்பு பார்த்துக்கொள்ளுவோமென்றால் பெரும்பிழையும் பெரும் மோசமும்
ஆகும் என்று நான் கவலைப்படுகின்றேன். நீங்களோ
கவலைகொள்ளுகின்றீர்களில்லை, யாது காரணம்?
|
வித்தக
வரசன் றந்த விளம்பரத் தொனிகேட் டின்னும்
இத்தலத் திருந்து நாச மெய்துத லினிதன் றென்று
சுத்தசத் தியமு மக்குச் சொல்லிவற் புறுத்து மென்னைப்
பித்தனென் றிகழ்கின் றீர்நும் பேதைமை பெரிது மாதோ. 32
|
|