பக்கம் எண் :

178

 

இத்தகு தலத்திடை யிரவு தங்கியான்
நித்திரை தெளிந்துத யாதி நீங்கவெற்
குத்தரங் கிடைக்குமோ வுலங்கொ டோளினாய்
எத்திற நுங்கருத் தியம்பு வாயென்றான்.           

14
     
 

எள்ளருங் கடைத்தலை யேந்தன் மற்றிவன்
உள்ளமும் வாக்குமொத் துளது போலுமால்
கள்ளமி னீர்மையன் கருதுங் காலெனா
ஒள்ளியோய் கேளென வுரைத்தன் மேயினான்.      

15
     
 

அரும்பிய மெய்விசு வாசத் தாலகந்
திரும்பியுன் னதநகர் சேர யாத்திரை
வரும்பர தேசிகள் வதிந்து போதர
விரும்பியங் கமைத்ததிவ் விநோத மாடங்காண்.     

16
     
 

வித்தக விவேகிசொல் விநய யூகிமெய்ப்
பத்திநற் சிநேகியென் றுரைக்கும் பார்ப்பன
உத்தமி நால்வரிங் குளர்மற் றொண்ணிலைச்
சித்திர மாளிகை யகத்துச் செவ்வியோய்.          

17
     
 

கைவரு தவநிரை யியற்றுங் கன்னியர்
தெய்விக சுருதிநன் குணர்ந்த செவ்வியர்
மெய்வரு நாவினர் விதேக முத்தர்போல்
ஐவரை யறுவரா யமைத்த வாருடர்.              

18
     
 

மற்றிவர் சீலமு மறைமெய்ஞ் ஞானமும்
பற்றறுத் தியோகுசெய் பரிசுந் தெள்ளிதின்
உற்றறி யஃதுனக் குறுதி யாமெனச்
சொற்றுடன் யூகியை விளித்துச் சொல்லுவான்.     

19
     
 

அம்மகேள் நாசதே சத்த னாமிவன்
நம்மசீ யோன்மலை நணுகு மாசையால்
இம்மலை யேறிவந் திடர்ப்பட் டெஞ்சியோன்
செம்மையை யறிந்தினிச் செய்வ செய்மினோ.     

20
     
 

என்றினி துரைத்திட விசைந்து வைதிக
நன்றிகொண் மடவரல் நம்பி யெங்குளை
ஒன்றியிவ் வழிவர வுற்ற தென்னையோ
இன்றெலாம் புலப்பட யியம்பு கென்றனள்.       

21