பக்கம் எண் :

180

 

அவ்வயிற் சிலதிய ரடுத்தங் கேந்திய
திவ்விய பானநீ ரருந்திச் சிந்தையிற்
கவ்வையின் றாயிருந் தரங்கின் காட்சியைச்
செவ்விதி னோக்கினன் றிகைத்துள் ளுன்னுவான்.    

30
     
 

புண்ணியங் குடிபுகப் புதுக்கு மாடமோ
கண்ணிய வருந்தவக் கழகந் தான்கொலோ
தண்ணளி யுறைவதற் கியன்ற சாலையோ
மண்ணுல கிறுத்தபே ரின்ப மாடமோ.              

31
     
 

துறைதொறு மாரணத் துழனி தூயநாட்
டிறைதிருப் புகழ்விளக் கினிய பாட்டிசை
மறைமொழி வழாதமா டகநல் யாழிசை
நிறையுமா லிதுவுமோர் நிமல வீடுகொல்.           

32
     
 

வெண்ணிலா வுமிழ்சுதை மிளிர்ந்த பித்தியிற்
றிண்ணிய சுருதியிற் றெளிந்த நீர்மைய
கண்ணடிப் படிவங்கள் ககன கோளத்தின்
வண்ணமித் துணையென வகுத்துக் காட்டுமால்.      

33
     
 

மாயமில் துளத்திடை வந்து தைவிக
தூயவா வியினரு டுன்னு மாறுபோல்
மேயசா ளரந்தொறும் வீசு மிவ்வகத்
தேயவ ருடல்புள கேறத் தென்றலே.               

34
     
 

பொறிக்கெலா நலந்தரு புனித மாப்புலன்
செறிக்குமாற் சிந்தனை தெருட்மடு மாலற
நெறிக்கெலாந் துணையென நிலவு மானில
வெறிக்குமா ளிகையிதை யென்னென் றுள்ளுகேன்.   

35
     
 

இன்னண மதிசயித் தெண்ணி வேதியன்
தன்னுளே யுவந்தன னிருப்பத் தண்ணளி
துன்னிய முத்தவத் தோகை மாரவன்
முன்னுற விருந்திவை மொழிகு வாரரோ.           

36
     
 

அரசிளங் கோமகற் கன்வு செய்யுமெய்ப்
பரிசுடை யையவெம் பக்க னீவரும்
வரிசைபெற் றனமெனு மகிழ்ச்சி யுண்டெமக்
குரைசெயுந் தரத்ததன் றுண்மை நூல்வலாய்.        

37