பக்கம் எண் :

181

 

தராதல விரக்ஷணை சமைக்குந் தன்மைய
புராதன சுருதிநன் குணர்ந்த புந்தியோய்
இராவுண வியையுமட் டாக யாங்குழீஇ
விராயுரை யாடுதும் விழைவெ னென்றனர்.       

38
     
 

ஆசறு மனத்தின ரன்பி னாற்சொலும்
வாசகங் கேட்டுள மகிழ்ந்து வேதியன்
பூசனை மொழிசில புகன்றெ னன்னைமீர்
பேசுது மெனக்கது பெரிய நன்றென்றான்.        

39
     
 

அத்திற மறிந்தரு கமர்ந்த வான்றமெய்ப்
பத்தியாம் பவித்திரை பவள வாய் திறந்
தெத்திற வெண்ணமற் றுன்னை யிவ்வழி
உய்த்தது புலப்பட வுரைத்தி யாலென்றாள்.      

40
     
 

முருந்துறழ் முரலாண் மொழிய முற்றுளந்
திருந்திய மறையவன் செவ்வி தாமென
அருந்தவத் தோய்பிறப் பவித்தை யேகுடி
இருந்ததே சம்மெமக் கிறைவன் பாரிடம்.       

41
     
 

ஈசன்கோ பாக்கினி யெரிக்கும் யானுறு
நாசதே சத்தையென் றெழுந்த நல்லுரை
ஓசைகேட் டஞ்சியுள் ளுடைந்து யங்கினேன்
பாசவெவ் வினைமிகு பார மாயிற்றால்.          

42
     
 

வழியறிந் தோடல னாயின் மாண்டுயிர்
அழிவனென் றோருணர் வகத்து ளூன்றலாற்
கழிவினுக் கிரங்கிநாட் கழிய விவ்வழி
மொழிசுவி சேஷகன் முடுக்கி னானென்றான்.     

43
     
 

                வேறு

 
     
 

நன்று வேதிய மறைவியாக் கியானிநன் மனையில்
நின்ற துண்டெனி னிகழ்ந்ததென் னிகழ்த்தென நீர்மை
குன்று றாதபூங் கொம்பனாள் வினவலுங் குறித்த
மன்றில் யான்கண்டு கேட்டவை மறப்பரி தம்ம.   

44
     
 

ஜென்ம சத்துரு வாயெமைக் கெடுப்பது தீரா
வன்ம முற்றபேய் மற்றதை யடர்க்கநம் மாட்டுத்
தன்ம ரக்ஷகர் கிருபைதந் தருள்வரித் தகைமை
என்ம னத்துற வூன்றிய தங்ஙன மெம்மோய்.     

45