|
அடர்ப்ப
தன்றுநீ யஞ்சிடே லாளரி யேறு
தொடர்ப்ப டுத்தவை யென்றுகா வலன்சொன்ன சொல்லால்
இடர்ப்ப டாதிவ ணிறுத்தன னன்றெனி லிருவர்
பிடர்ப்பு றம்பிடித் தோடுவல் பெறுங்கதி பிறவே.
|
54 |
|
|
|
|
பெண்ண
ருங்கலத் தாயர்மீர் பிணியிழைத் தோடி
உண்ணு நீர்நசை யாற்றிரிந் துலைந்தவோ ருழைக்குத்
தண்ண றும்புனற் றடாகமொன் றெதிர்ந்தபோற் றமியேற்
கெண்ண ருங்குணத் திவ்வுழை லபித்ததிவ் விரவில்.
|
55 |
|
|
|
|
சாவ
தானிபே ருதவியின் றகைமையுந் தழைத்த
ஆவ லோடெனக் காதரம் புரியும தன்பும்
நாவி னாலன்றென னுளத்திடை நன்றிபா ராட்டித்
தேவ தேவனைத் துதிப்பலென் றிசைத்தனன் செய்யோன்.
|
56 |
|
|
|
|
இனிது
வேதியன் வாய்மைகேட் டகங்களித் தெல்லாம்
புனித வாவியி னருட்செய லாமெனப் போற்றிக்
கனித னீர்மையிற் கண்ணுளங் கசிந்தனள் பத்தி
வனிதை யவ்வயின் விவேகிமற் றிவ்வுரை வகுக்கும்.
|
57
|
|
|
|
|
மக்க
ளைத்துணை மனைவியை மருவுசம் பத்தைத்
தொக்க ளைந்தவுன் கிளைஞரைத் துறந்துவான் வழியிற்
புக்கு வந்தனை மற்றவற் றிடைக்கிடை புகுந்து
சிக்கு கின்றயோ சிந்தனை செப்புதி யென்றாள்.
|
58
|
|
|
|
|
புந்தி
மாதிது புகறலும் புறத்தொடர் பெல்லாம்
முந்து வர்த்துப்பின் வேட்டுழல் கின்றவோர் மூடச்
சிந்தை யின்றெனி னும்பழ வாசனை சிறிது
வந்து வந்துபோம் விடுபட்ட வூசலின் வடம்போல்.
|
59
|
|
|
|
|
மாலை
கண்டர வாமென மயங்கிப்பின் வாங்கும்
சீல மாயொரு தீங்குறிற் றிகைத்துளந் திரும்பிப்
போலி வாழ்க்கையிற் புகவரு மாயினும் புகழோய்
மேலை நாணடுத் தீர்வையை நினைத்துடன் மீளும்.
|
60
|
|
|
|
|
நேர்ந்த
தாற்பல சமயங்க ணிருவிசா ரத்தைச்
சார்ந்தி டற்குளஞ் சாய்ந்திடி லெத்தனை தவறும்
ஆர்ந்த நிந்தையு மாமொரு முறையரு வருத்துத்
தீர்ந்த பின்னதை விழைவது வோநர ஜென்மம்.
|
61 |