பக்கம் எண் :

185

 

குருதி காட்டிய சிலுவையை நினைப்பதுங் கோதில்
சுருதி நூலையுய்த் துணர்வதுந் துகிலையுன் னுவதும்
வருதி றத்தமா மகிமையை மதப்பதுஞ் சுபாவந்
தருது ரிச்சையைக் களையுமெய்ச் சாதன சதுஷ்கம்.     

70
     
 

தீய சிந்தையைச் செகுப்பதுஞ் செம்மையிற் றிறம்பா
மாய மற்றநற் கிரியையை வளர்ப்பது மயங்கி
மேய சோதனைக் கெதிருற விறல்கரு வதுமெற்
கேய வத்தகு சாதன சதுஷ்கமே யென்றான்.           

71
     
 

ஆரி யன்சொலக் கேட்டலு மாரண விவேகி
சீரி தாமெனச் சிந்தையுள் வியந்துநீ சீயோன்
மேரு மாமலை யாத்திரை விளைந்ததென் விருப்பங்
கூரி யோயெது குறித்துள கூறுதி யென்றாள்.           

72
     
 

இலகு வாண்மதி முகத்தினா யென்னுயிர்த் தோழர்
உலக லாமுயக் கொண்டவர் வினைச்சுமை யொழித்தோர்
அலகி லாமகி மைப்பிர தாபமோ டாங்கு
குலவி வீற்றிருத் தலைக்கண்டு களிப்பதோர் குறிப்பால்.

73
     
 

இம்மை யேயெனை யீடழித் திடுபல விடுக்கண்
வெம்மை மிக்கபல் வேதனை விடயங்க ளெதுவும்
அம்மை யிற்புகா தமிமர ணமுமிலை யாங்கு
செம்மை சேர்மதி மற்றிதோர் சிந்தனை தெரிநீ.        

74
     
 

பிணங்கு றாமனப் பெருந்தகை யவரொடும் பிரியா
திணங்கி வாழ்வது மெம்பிரா னடிசிரத் தேந்திக்
குணங்க ளைப்புகழந் தேத்தியின் னிசையொலி கூட்டி
வணங்கி நிற்பது மெனக்குள மற்றொரு வாஞ்சை.      

75
     
 

இத்த கைப்படு திடவிசு வாசத்தை யெனக்குள்
உய்த்திம் மட்டுமா தரித்துநின் றுறுதுணை யாகி
எத்தி றத்தினும் பாதுகாத் தளிப்பதெம் மிறைவன்
வித்த கப்புனி தாவியின் செயலென விண்டான்.       

76
     
 

சீர்மை யுற்றமெய்ப் கிறிஸ்தவன் றிடவிசு வாச
நீர்மை யுற்றறிந் தாமிது நிண்ணய மென்னாக்
கூர்மை யுற்றநல் விவேகியுட் குதுகலித் திருப்ப
நேர்மை யுற்றசி நேகிமற் றின்னன நிகழ்த்தும்.        

77