|
ஐய
மின்றற வோயுனக் காத்தும வாழ்வு
கைய தாயதெம் மாண்டகை கருணையி னழைப்பும்
வைய ரக்ஷகன் மலரடி யாட்கொண்ட மாண்புந்
துய்ய வாவிநல் காரருட் பெற்றியுந் துணியில்.
|
78 |
|
|
|
|
மண்பி
சைந்தருத் தாரஞர் மலிந்தபோ தத்துங்
கண்பி சைந்தழு சேய்க்குளங் கசியுமோர் தாயின்
பண்பி சைந்தநம் பரம்பரன் பத்தபா லனத்தை
நண்பி சைந்தினி தாற்றுமா றறிந்தன நல்லோய்.
|
79
|
|
|
|
|
அரிய
மித்திர விங்கிது நிற்கநின் னன்புக்
குரிய காதல மக்கண்மற் றுளர்கொலோ வுளரேற்
பிரிய விட்டுனைப் பிரிந்தவண் டரிப்பதென் பிரமை
தெரிய விள்ளுதி யென்றனள் சிநேகியாந் தெரிவை.
|
80 |
|
|
|
|
வினவு
வாசகங் கேட்டலும் விம்மிநெட் டுயிர்த்துக்
கனவு போன்றதெங் காமிய வாழ்வெனக் கருதி
வனவி ழித்துணை நீர்முத்த முகுத்திட மறைதேர்
பனவ னுள்ளுடைந் துருகிமற் றிவ்வுரை பகர்வான்.
|
81 |
|
|
|
|
குணங்கு
லாவிய குயிற்குரற் கோமள வல்லி
மணங்கு லாவிய மனைவியோ டீரிரு மைந்தர்
நிணங்கு லாமுடற் குயிரென வெனக்குளர் நிகழ்த்தில்
கணங்கு லாவிய கிளைஞரும் பலருண்டு கண்டாய்.
|
82 |
|
|
|
|
புலைநி
ரம்பிய நிருவிசா ரத்தொடு புணர்ந்த
அலைநி ரம்பிய கடற்புவி முழுவது மவிக்கும்
உரைநி ரம்பிய கனலின்வா னுகுதழ லென்னாக்
கலைநி ரம்பிய கட்டுரை தெரித்தனென் கவன்று.
|
83 |
|
|
|
|
உலக
வாழ்க்கையை யுறவினை யூர்ப்பழக் கத்தை
அலகை மார்க்கத்தை யழல்விட வரவென வஞ்சி
விலகி யென்னொடுந் திருமியிம் மெய்வழி பிடித்தற்
கிலகு நன்மதி படைத்தில ளென்மனைக் கிழத்தி.
|
84 |
|
|
|
|
மறுவி
லாமதி முகத்தினாய் மைந்தரோர் நால்வர்
சிறுவர் சொன்மதி தெருண்டிடார் நன்மையிற் றிறம்பி
உறுவ தாயசிற் றின்பவுல் லாசமே யுவப்பர்
நறுவி தெள்ளிவெங் கடுத்தழை நயக்குமாப் போலும்.
|
85
|