|
பொறுமைத்
தெய்வவேந் தாணையைப் பேணலர் புகுதும்
மறுமைச் சிந்தையோர் சற்றில ரிகத்துறு வாணாள்
குறுமைத் தென்பதுங் கொள்ளலர் குவலய வாழ்வின்
சிறுமைப் போகம்வேட் டுழல்வரெம் மூர்வரு சிதடர்.
|
86
|
|
|
|
|
பாபத்
தைப்பர னீதியைப் பகர்நடுத் தீர்ப்பின்
ஆபத் தைக்குறித் தறிவுறுத் தாவிநல் லருளாந்
தீபத் தைக்கெடுத் திருட்படு தீவினை யீட்டிச்
சாபத் தைப்பெறச் சதோதய முயல்வரச் சழக்கர்.
|
87 |
|
|
|
|
தெள்ளி
தென்மனை மக்களைத் தெருட்டிய செஞ்சொல்
உள்ளி லங்கணத் துக்கதீம் பாவினை யொத்த
வள்ளி யோயெமர்க் குரைத்தசொல் வல்லுளி மதியா
தெள்ளி யிட்டநித் திலத்தையொத் துளதுகா ணிசைக்கில்.
|
88
|
|
|
|
|
சொற்ற
தோர்ந்திலர் வடித்தகண் ணீரொடு சும்மை
உற்ற டைந்தமெய் வருத்தமும் விடுத்தநெட் டுயிர்ப்புஞ்
சற்று நோக்கல ரிகழ்ந்தன ராதலிற் றமியேன்
முற்று நீத்துவந் திவ்வழி பிடித்தனன் முதியோய்.
|
89 |
|
|
|
|
கறுத்த
சிந்தையர் மடமையாற் கனன் றுவர்த் தெள்ளி
வெறுத்தெ னைப்புறக் கணித்தன ராயினும் விமலன்
ஒறுத்தி டாதவர்க் குண்மையைத் தெரித்தறி வுறுத்திப்
பொறுத்தி ரக்ஷணை நல்கமன் றாடுவல் புகழோய்.
|
90 |
|
|
|
|
ஆக்கு
தீவினை யருவருத் தஞ்சுமென் மனமும்
வாக்குஞ் செய்கையு மாறுகொண் டனமனை மக்கள்
போக்கி னுக்கெனை யாதலிற் பொருந்தல ராகி
நீக்கு மாறொருப் பட்டனர் நிகழ்ந்ததீ தென்றான்.
|
91 |
|
|
|
|
கனித
னீர்மையன் வாய்மையிற் கனன்மெழு கென்ன
வனிதை யுள்ளநெக் குருகினண் மறைமொழி யாய
புனித வித்தவன் புந்திநன் புலத்திடைப் பொருந்தி
இனிதி னுய்த்தவான் போகத்தை வியந்தன ளியம்பும்.
|
92
|
|
|
|
|
பன்னு
வேதபா ராயண பரனொரு மைந்தன்
என்னி மித்தமே தினியுமைப் பகைத்திடு மேனும்
பின்ன டாதுசான் றாகுதிர் பேதுறீ ரென்னாச்
சொன்ன வாசக முண்டதற் குண்டுகொல் சோர்வு.
|
93
|