|
அன்று
வேதநன் னூனெறி கடைப்பிடித் தாபேல்
மன்று ளேபுரி நற்கரு மத்தினால் மனது
கன்றி வெஞ்சினங் கதுவியங் கவன்றனைக் காயீன்
கொன்று தீர்த்தன னிதுவன்றோ குவலயக் கொள்கை.
|
94 |
|
|
|
|
திகழு
நூன்மதிச் செவ்வியோய் செவ்விய ரென்னப்
புகழு வார்க்கன்று நந்தமைப் புறக்கணித் தெள்ளி
இகழு வார்க்குநன் றியற்றலே நங்கட னென்றும்
அகழு வார்க்குநன் றாற்றுமாற் றாரணி யைய.
|
95
|
|
|
|
|
தாயைத்
தந்தையைத் தாரத்தைத் தன்றுணைத் தமரைச்
சேயைச் செல்வத்தை வெறுத்துயர் ஜீவனை விரும்பி
மாயைக் கீடழி யாதுநல் வழிப்படு மாண்பே
பேயைத் தாக்கிய பெருந்தகைக் காட்படும் பெற்றி.
|
96 |
|
|
|
|
காவ
லன்பெருங் கருணையிற் கரையில்பே ரின்ப
ஜீவ நன்மையைத் தெரிந்தனை மற்றிதிற் சீரி
தாவ தென்கொலோ வின்னுமவ் வாண்டகை யருளால்
வீவி லானந்த பதவியும் பெறுகுவை மேலோய்.
|
97 |
|
|
|
|
தேசு
மல்கிய சிற்குணா லயதிரி யேகர்
ஆசி மல்குக வனவர தமுமுனக் கென்னாப்
பேசி யன்பினாற் பிறங்குமெய்ப் பத்தியை நோக்கி
ஆசி லாமனத் தணங்கனா ளஞ்சலித் துரைப்பாள்.
|
98 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
அருந்த
வத்தெழில் பெற்றமெய் யாரணி
திருந்த வாரியன் செப்பிய தோர்ந்தனம்
பொருந்து மன்பரைக் காக்கின்ற புண்ணியப்
பெருந்த கையருட் பெற்றியைக் கண்டனம்.
|
99 |
|
|
|
|
அன்னை
யுண்டுசின் னேரம் முதுணற்
கின்னு மாவிக்கி னியசம் பாக்ஷணை
பன்னு துங்கிறிஸ் தன்புப ழுத்தவா
றுன்னு துங்கருத் தென்னென வோதினாள்.
|
100 |
|
|
|
|
இதுசி
நேகியி யம்பலு மேந்திழை
மதிம டந்தையென் வாஞ்சையு மீதென்றாள்
புதுவி ருந்தின னும்மகிழ் பூத்துடன்
அதிந லமடி யேற்கம்மன மீரெனா.
|
101
|