பக்கம் எண் :

190

 

நாய கன்புனி தாத்துமம் நைந்ததும்
மீயி ரத்தவெ யர்த்துளி வீழ்த்ததும்
ஏய தின்னண மென்றெடுத் தோதவாய்
ஆயி ரம்மிலை யாயுவு மற்பமால்.          

110
     
 

பெருகு மன்பிற்பி ணித்தவப் பெற்றியை
உருகு முள்ளத்திர் யானுரை செய்வதற்
கருகி யல்லென்மற் றாயினு மாவியின்
திருவ ருட்கொட றிந்தன செப்புகேன்.      

111
     
 

என்று பன்னியி கபர சாதனம்
நன்று ணர்ந்தந லங்கிளர் பத்தியாந்
துன்றி ருங்குணத் தோகைதன் சிந்தனை
ஒன்றி யீசன ருட்டுணை யுன்னுவாள்.       

112
     
 

               சம்பாக்ஷணைப் படலம் முற்றிற்று

 
     
 
இரக்ஷணிய சரிதப் படலம
 
 
     
 

                        (ஸ்தோத்திரம்)

 

   
 

அகில லோகம்ப டைத்தளித் தன்பினாற்
சகல மன்னுயி ருங்கதி சார்ந்துய
மகவை நல்கிய மாண்புறு தாதையாம்
பகவ னுக்கித யாஞ்சலி பண்ணுவாம்.        1

     பொழிப்புரை. உலகமெல்லாம் படைத்துக் காப்பாற்றி, அங்குள்ள
சகல மானிட ஜீவன்களும் மோட்ச கதியை யடைந்து சுகிக்குமாறு
அவர்கள் பேரிலுள்ள அன்பினால் தன் குமாரனை பலியாகக் கொடுத்த
மகிமை தங்கிய பிதாவாகிய கடவுளுக்கு மனதால் வணக்கம் செய்வோமாக.
 

                            வேறு

 

உலகமகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகை யேற
அலகையுளந் திகிலேற வகண்டபரி பூரணனா ரருண்மெய் வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நரவுருவாய் விளங்கி யன்பாற்
சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியனடியைச் சிந்தை செய்வாம்.
     
     
                                            2

     (பொ - ரை) உலகத்திலுள்ள மானிடர்கள் சநதோஷத்துடன் கடைத்தேறவும், மோட்சத்திலுள்ளவர்கட்டு ஆனந்த முண்டாகவும், சாத்தான் மனதில் பயமுண்டாகவும், எங்கும் நிறைந்த கடவுளது அருள்